தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு


20140826_112307வங்க கடலில் உருவான ‘கியான்ட்’ புயல் ஆந்திர கடற்கரை நோக்கி நகர்ந்தது  இது படிப்படியாக வலு இழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.

தற்போது ஆந்திரா கடலில் மையம் கொண்டுள்ளது. அது தொடர்ந்து வட தமிழகத்தை நோக்கி மேற்கு மற்றும் தென் மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

இதன்காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.  30-ந் தேதி வட கிழக்கு பருவ மழை தொடங்கும் இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது:-

தென்மேற்கு பருவ மழை காலம் முடிந்து விட்டது வட கிழக்கு பருவ மழை  30-ந் தேதி தொடங்கும். தமிழ் நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என்றும் சென்னையிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு என்றும் அவர் கூறினார்.

சென்னையில் வெயிலின் தாக்கம் குறைந்தது. இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப் படுகிறது.  இதற்கிடையே 30-ந் தேதி தொடங்கும் வடகிழக்கு பருவ மழை 4 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் அதன் பிறகு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலைமையம் அறிவித்துள்ளது.


 

Leave a Response