இயக்குனர் அன்பழகன் இயக்கியுள்ள ரூபாய் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரபு சாலமன் இனிமேல் நான் படங்கள் தயாரிக்க போவதில்லை எனக் கூறினார்.
சாட்டை படத்தைத் தொடர்ந்து அன்பழகன் இயக்கியுள்ள படம் ரூபாய். இந்தப் படத்தை இயக்குனர் பிரபு சாலமன் தாயரித்திருக்கிறார். இந்தப் படத்தில் கயல் படத்தில் நடித்த சந்திரன், ஆனந்தி மீண்டும் இணைந்து நடித்திருக்கின்றனர்.இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார்.
இந்த விழாவில் பேசிய அவர் எனது உதவி இயக்குனர் அன்பழகன் இயக்கிய சாட்டை படத்தை தாயாரிக்க தாயரிப்பு நிருவனம் தொடங்கினேன். ஒரு படத்தை இயக்குவதைவிட அந்த படத்தை தயாரித்துவிட்டு அதை வெளியிடுவது என்பது சாதாரண காரியம் அல்ல என்பதை அப்போதே புரிந்து கொண்டேன்.
மீண்டும் அன்பழகன் இயக்கும் ரூபாய் படத்தை எடுக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார், அதனால் மீண்டும் தாயரிக்க முடிவு செய்தேன். திரைபடங்களை தயாரிக்க நல்ல சூழ்நிலை அமைய வேண்டும்.இனி நான் படங்களை தயாரிக்கப் போவதில்லை என்று கூறினார்.