துபாய்க்கு பறந்த ‘சர்வர் சுந்தரம்’!

santhanams-server-sundaram-begins-with-cooking

சந்தானம், ‘லொள்ளு சபா’ ராம்பாலா காம்போவில் சமீபத்தில் வெளியான ‘தில்லுக்கு துட்டு’ படம் நல்ல வரவேற்பை பெற்றது.  இதனைத் தொடர்ந்து சந்தானத்தின் கைவசம் ‘சர்வர் சுந்தரம்’ மற்றும் செல்வராகவனின் புதிய படம் உள்ளது.

இதில் ‘சர்வர் சுந்தரம்’ படத்தை ஆனந்த் பால்கி இயக்கி வருகிறார். வைபவி என்பவர் சந்தானத்திற்கு ஜோடியாக அறிமுகமாகவுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இதற்கு ‘குக்கு’ புகழ் பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார்.
‘கெனன்யா பிலிம்ஸ்’வுடன் இணைந்து ‘ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் தயாரித்துவரும் இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஆடியோ ரைட்ஸை பிரபல நிறுவனமான ‘திங்க் மியூசிக்’ கைப்பற்றியுள்ளதாம். சென்னை, கோவா, தென்காசியில் முக்கிய காட்சிகளை படமாக்கிய படக்குழு, தற்போது துபாய் பறந்துள்ளது. அங்கு தொடர்ந்து 12 நாட்கள் நடக்கவிருக்கும் ஷூட்டிங்கில், ஒரு பாடல் மற்றும் க்ளைமேக்ஸ் காட்சி படமாக்கப்படவுள்ளனவாம்.

Leave a Response