காஸ்டியும் டிசைனருடன் புது கணக்கு ஆரம்பிக்கும் அமலா பால்…?கணவர் விஜயுடன் பிளவா??

AL Vijay+Amala Paul+Divorce
“நீலதாமரா” என்னும் திரைப்படம் மூலம் மலையாள திரைத்துறைக்குள் 2009’ம்ஆண்டு முதன் முதலாக நடிக்க நுழைந்தார் அமலா பால். 2010’ல் “வீரசேகரன்” என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் அமலா பால். அடுத்ததாக “சிந்து சமவெளி” என்னும் படத்தில் மாமனாரை கரக்ட் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்து கொஞ்சம் பிரபலமானார். பிரபு சாலமனின் இயக்கத்தில் ” மைனா” திரைப்படத்தில் நடித்து தன்னுடைய மார்கெட்டை உயர்திகொண்டார் இந்த அமலா பால்.

பின்னர், இயக்குனர் AL.விஜய் இயக்கத்தில் “தெய்வ திருமகள்” என்னும் படத்தில் நடித்தார். இந்த படபிடிப்பு காலத்தில் அமலா பாலுக்கும் இயக்குனர் AL.விஜய் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. அமலா பால் வீட்டில் அவர்களுடைய காதலுக்கு விரைவில் பச்சை கோடி காட்டிவிட்டனர். ஆனால் விஜய் வீட்டில் யாரும் இவர்களுடைய காதலை விரும்பவில்லை. இதனால் அவர்களுடைய காதலை வெளிப்படையாக தெரிவிப்பதற்கு மூன்று வருடங்கள் ஆகின. 2014’ம் வருடம் ஆரம்பத்தில் அவர்களுடைய காதலை வெளியே சொன்ன இருவரும் 2014 ஜூன் 12’ம் தேதி அன்று இருவீட்டார் ஒப்புதலுடனும் திருமணம் செய்துகொண்டனர்.

ஆடின கால் அடங்காது என்பதை போல், திருமணதிற்கு பிறக்கும் அமலா பாலுக்கு நடிப்பில் இருந்த ஆர்வம் குறையவில்லை. விஜய்யும் அவருடைய குடும்பத்தாரும் பல முறை அறிவுரை கூறிய பிறகும், அவர்களுடைய பேச்சுக்கு கட்டுப்படாமல் நடிப்பில் மிகுந்த கவனம் செலுத்தினார்.

சில நாட்களாக டெல்லியில் வசிக்கும் ஒரு ஆடை வடிவமைப்பாலருடன்(காஸ்டியும் டிசைனர்) நட்பில் அமலா பால் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. சென்னையில் கணவர் விஜயுடன் வசிக்கவேண்டிய அமலா பால் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் டெல்லியில் முகாமிட்டு கொண்டிருப்பதாக கணவர் விஜய்க்கு தெரிய வந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதை பற்றி விஜய் அமலா பாலிடம் கேட்க, இருவருக்கும் சில மாதங்களா சல சலப்பு இருந்து வந்துள்ளது. இந்த விஷயம் விஜய்யின் பெற்றோருக்கு தெரியவர அமலா பாலிடம் பேச விசாரிக்க முயற்சித்துள்ளனர். அமலா பாலோ, அதை பற்றி பொருட்படுத்தாமல் அப்போது டெல்லி பறந்துள்ளார். அமலா பாலின் இந்த போக்கை கண்ட விஜய்யும் அவருடைய குடும்பத்தாரும் விவாகரத்து தான் ஒரு முடிவாக இருக்கும் என திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விவாகரத்து விஷயம் பற்றி விஜய்யும் அமலா பாலும் கலந்து பேசியுள்ளனர். இருவரும் விவாகரத்து செய்து கொள்ளலாம் என பரஸ்பர முடிவு எடுத்துள்ளதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Response