மே 11 அன்று வெளியாகும் அரவிந்த்சாமி திரைப்படம்…

இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடித்துள்ளார். அமலாபால் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா ஆகியோருடன், மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார். அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். நடிகர் ரமேஷ் கண்ணா இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ள ‘பரதன் பிலிம்ஸ்’, இப்படத்தினை ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது இந்த படத்தின் வெளீயீட்டு தேதி மாற்றப்பட்டு உள்ளது.

“அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்” திரைப்படம் ஆங்கிலம் மற்றும் பல இந்திய மொழிகளில் ஏப்ரல் 27’ம் தேதியன்று ரிலீஸ் ஆகிறது. இந்த வேளையில் முக்கிய நகரங்களில் திரையரங்குகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள காரணத்தினால், பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” மக்கள் அனைவரும் பார்க்கவேண்டும் என்னும் காரணத்தினாலும் இப்படத்தினை மே 11’ம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தை சித்திக் இயக்க, ‘ஹர்ஷினி மூவீஸ்’ சார்பாக எம்.ஹர்சினி தயாரித்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை விஜய் உலகநாதன் மேற்கொள்ள, கே.ஆர்.கெளரி சங்கர் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை பணியை ஜோசப் நெல்லிகன் செய்ய, பிருந்தா நடனத்தை இயக்க, அம்ரேஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் தமிழகம் முழுவதும் வருகின்ற மே 11 அன்று உலகமெங்கும் வெளியாகிறது.

Leave a Response