சத்யராஜுக்கு ஜோடியான அமலாபால்

 

amala-paul-2

இயக்குனர் விஜய்யுடனான திருமண முறிவுக்கு பின்னர், அமலாபாலுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இப்போதைக்கு தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘வடசென்னை’ படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். வேறு எந்த படத்திலும் இவரை யாரும் ஒப்பந்தம் செய்யவில்லை.

இந்நிலையில், சத்தமே இல்லாமல் அமலாபால் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ‘முருகவேல்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் சத்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். மற்றொரு கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். கஞ்சா கருப்பு, பப்லு ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஜோஷி என்பவர் இயக்கியிருக்கிறார். பெங்களூர் மற்றும் கோவாவில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். நாகன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.குகன் பிள்ளை தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Leave a Response