பிறந்த நாளில் பாட்டு, சுதந்திர தினத்தில் படம்!!

Thalaivaa-Movie-Posters-Wallpapers-1_2_S_211

விஜய் – அமலாபால் ஜோடியாக நடித்துள்ள படம் தலைவா. சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை விஜய் இயக்கியுள்ளார். ஸ்ரீமிஸ்ரி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தை வேந்தர் மூவீஸ் வெளியிடுகிறது. படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் வரும் 21-ஆம் தேதி வெளியாகும் என்று சோனி மியூசிக் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதாவது விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதிக்கு ஒரு நாள் முன்பாக பாடல்களை வெளியிடுகிறது இசை உரிமையைப் பெற்றுள்ள சோனி மியூசிக் நிறுவனம். மேலும் ஜி.வி.பிரகாஷின் பிறந்தநாள் வரும் 13-ஆம் தேதி என்பதால் அன்றைய தினம் ஒரு பாடலை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இப்படத்தின் தமிழக, கர்நாடக, கேரள உரிமை பெரும் விலைக்கு விற்கப்பட்டுளது. வெளிநாட்டு உரிமை, விஜய் படத்துக்கு இதுவரை கிடைக்காத அளவுத்து நல்ல விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.

ஜூலையில் சூர்யாவின் சிங்கம்-2 வெளியாவதாலும், வேந்தர் மூவீஸ்-ன் மேலும் சில படங்கள் வெளியாக இருப்பதாலும் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.