விஜய் பெயரில் இலவச விளம்பரம் தேடுகிறதா அந்த பட குழு!

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு இது வரை எந்த ஒரு பெயரும் வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் விஜயின் பெயரை உபயோகப்படுத்தி இலவச விளம்பரத்தை தேடும் விதத்தில் ஒரு திரைப்பட நிறுவனம் ஒரு பத்திரிகை செய்தி அனுப்பியுள்ளது.

‘சம்பவம்’ திரைப்பட தலைப்பு குறித்து அப்படத்தின் இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் அனுப்பியுள்ள பத்திரிகை செய்தியில் கூறியுள்ளதாவது, “நான் சம்பவம் என்ற படத்தை இயக்கி வருகிறேன். ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ், பூர்ணா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்து வருகிறார்கள். சம்பவம் என்ற தலைப்பை முறையாக பதிவு செய்து இப்படத்தின் படப்பிடிப்புகளை நடத்தி வருகிறோம். ஆனால் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு சம்பவம் என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது எங்கள் படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் என்ற தலைப்பு எங்களுக்கு சொந்தமானது. அதனால் விஜய் படம் பற்றி வரும் வதந்திகளை நம்பாதீர்கள்” என்று அந்த பத்திரிகை செய்தியில் கூறியுள்ளார் இயக்குநர்.

மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ், ஜான் மேக்ஸ் இந்த ‘சம்பவம்’ படத்தை தயாரித்து வருகிறார்கள். ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். பக்ரீத் படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

இயக்குநர் அனுப்பிய பத்திரிகை செய்திகளில் இவர்கள் இயக்கம் ‘சம்பவம்’ திரைப்படத்தின் டிசைனையும், விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படத்திற்கு ‘சம்பவம்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அப்படத்தின் ‘டிசைனையும்’ அனுப்பியுள்ளனர். அந்த இரு டிசைன்களையும் பார்க்கும் போது, இரு படங்களின் தலைப்பு டிசைன்களும் ஒன்றை போலவே உள்ளது. இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் குற்றம் சொல்லும் விதமாக தலைப்பில் ஏதாவது சிக்கல் இருக்கலாம், ஆனால் இவர்களுடைய படத்தின் தலைப்பு டிசைனை போலவே விஜய் படத்தின் தலைப்பு டிசைனை அனுப்பியுள்ளார் இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம்.

இவைகளை பார்க்கும் பொது, ‘சம்பவம்’ திரைப்பட இயக்குனர் அவருடைய படத்திற்கு விளம்பரம் தேடுவதற்காக விஜயை சந்திக்கு இழுக்கிறாரா என்ற சந்தேகம் தான் வருகிறது!!

Leave a Response