நாங்களும் சி3-னு பேரு வைப்போம்ல: சிங்கம் S3-யாக மாறியது..!

singam 3

சூர்யா நடிக்கும் சிங்கம் மூன்றாம் பாகத்தின் பாஸ்ட்லுக் இன்று வெளியாகி உள்ளது. நேற்றே டைட்டில் மாறப்போவதாக செய்திகள் வெளியானதால், படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என எல்லோரும் அவலாகா எதிர்பார்த்து காத்திருந்தனர். இரண்டு பாகம் ஹிட் அடித்த படத்திற்கு ஏன்? பெயர் மாற்ற வேண்டும் என பலரும் யோசனையில் இருந்தபோது, படத்தின் பெயரை சுருக்கப்போவதாக தவகல் வெளியானது.

எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு 2.ஓ எனப் பெயர் வைத்ததை போன்று சிங்கம் படத்திற்கு 3.சி எனப்பெயர் வைப்பார்களோ என பேச்சு அடிபட்டு வந்த நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று நள்ளிரவு வெளியானது. டைட்டிலில் சின்ன சேஞ்ச் S3 என்று வைத்துள்ளனர். அரசு வரிவிலக்கு பெற வேண்டுமானால் படத்தின் பெயர் தமிழில் இருக்கவேண்டும். தமிழில் சி3-னு தானே வைக்க வேண்டும். அப்படி பார்த்தால் முன்பே கணித்த டைட்டிலை தான் வைத்துள்ளனர். புள்ளியை தான் காணவில்லை.

போஸ்டரில் வேறு ‘யுனிவர்செல் காப்’ என குறிப்பிட்டுள்ளனர். இந்த முறை கண்டம் விட்டு கண்டம் தாவுகின்றாரா? இல்லை கிரகம் விட்டு கிரகம் தாவுகின்றாரா? எனப்பார்க்கலாம்.

Leave a Response