மீண்டும் அட்லியுடன் இணையும் விஜய் – பார்த்ததுமே பிடித்துவிட்டது..!

atlee vijay

விஜய்யின் முதல் படம் ஹிட் அடித்தால், அதே இயக்குனரின் இயக்கத்தில் இரண்டாவது படத்தில் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். திருப்பாச்சி – சிவகாசி பேரரசு இயக்கம். போக்கிரி – வில்லு பிரபுதேவா இயக்கம். துப்பாக்கி – கத்தி முருகதாஸ் இயக்கம். இந்த இயக்குனர்களின் முதல் படம் வெற்றி பெற்ற பின் தான் இரண்டாவது படம் சேர்ந்து பண்ணலாம் எனக்கூறினார். ஆனால் அட்லி இயக்கிய தெறி படத்தை பார்த்ததும் அடுத்து நாம் சேர்ந்து படம் பண்ணலாம் எனக்கூறியுள்ளார். அட்லியும் சரி எனக்கூறிவிட்டாராம்.

விஜய் பரதன் இயக்கத்தில் நடித்து முடித்த பின்னும், அட்லி ஆர்யா மற்றும் ஜெய்யை வைத்து அடுத்த படத்தை இயக்கிய பின்னும் ஒன்றாக இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response