ஜெர்மெனியில் விஜய்யாக மாறிய பெண்…!

vijay girl
தமிழ் சினிமாவில் அல்லது தமிழ் தொலைக்காட்சிகளில் பிற நடிகர்களை போன்றே வேடமிட்ட டூப் நடிகர்கள் நம்மை சிரிக்கவைப்பார்கள். நடிகர்களுக்கு பெரும்பாலும் ஆண்களே டூப் போடுவார்கள். ஆனால் யூ டியூப் மூலம் ஒரு விசித்திர விஜய் உருவாகியுள்ளார். நடிகர் விஜய் போன்றே வேடமிட்டு, ரபேக்கா என்ற பெண் இணையத்தை கலக்கி வருகின்றார். இவர் ஜெர்மனியில் வசிக்கும் ஈழத்தமிழ்ப்பெண். விஜய் போன்ற கெட்-அப்பில் இவர் நடனமாடிய பாடல் இணையத்தில் சூப்பர் ஹிட். இவரை விஜய்யாக மாற்றியதே இவருடைய அண்ணன் மரியதாசா.
மரியா தாசா தன்னுடைய யூடியூப் சேனலுக்காக வித விதமாக வீடியோ எடுப்பது வழக்கம். ஒரு நாள் தன் தங்கையை பார்க்கும்போது விஜய் சாயல் தென்பட்டுள்ளது. உடனே தங்கைக்கு விஜய் கெட்டப்போட்டு நடனமாட வைத்துவிட்டார். ‘காவலன்’ படத்தில் வரும் ‘சட சட மழையென’ என்ற பாடலில் வரும் விஜய்யின் ஹேர்ஸ்டைல் தான் ரபேக்கா விஜய்போல் மாற உதவியுள்ளது. அந்த கெட்டப்பில் புலி படத்தின் வரும் ஏண்டி ஏண்டி தெலுங்கு பாடலுக்கு நடனமாடிவிட்டார். பார்பதற்கு காமெடியாக இருந்தாலும், ஒரு பெண் விஜய்யாக மாறியது அதிசயம் தானே. வீடியோவும் வைரலாகி வருகின்றது.
ரபேக்கா நடனமாடிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Response