சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகரித்த பின்பு, பிரபலங்கள் டூ பத்திரிக்கை டூ ரசிகர்கள் என்ற நிலைமை மாறி, பிரபலங்கள் டூ ரசிகர்கள் என்றாகிவிட்டது. முன்பெல்லாம் ரசிகர்கள் அல்லது கட்சி தொண்டர்களுக்கு ஒரு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கவேண்டும் என்றால் கூட பத்திரிக்கை வாயிலாக செய்திகள் வெளியிடுவார்கள் சினிமா கலைஞர்களும், அரசியல் தலைவர்களும். ஆனால் சமூகவலைதளம் வந்தபின்பு பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் உள்ள இடைவெளி நெருக்கமாகிவிட்டது.
பேஸ்புக் ட்விட்டர் பக்கம் பெரும்பாலான பிரபலங்கள் காலடி எடுத்து வைத்துவிட்டனர். ஆனால் வணிக ரீதியாக வருமானம் ஈட்டித்தரும் யூடியூப் பக்கம் பெரும்பாலும் லாப நோக்கதுடனே துவங்கப்படும். சமூகவலைதள விமர்சகர்கள் பெரும்பாலும் இதில் தான் வருமானம் ஈட்டிவருகின்றனர். யூ டியூப் வலைதளத்திலும் தற்பொழுது பிரபலங்கள் காலடிபட ஆரம்பித்துவிட்டது. ‘உலக நாயகன் டியூப்’ என கமல் சில மாதங்களுக்கு முன் ஒரு சானலை யுடியூப் மூலம் துவங்கினார். தற்பொழுது அவரை தொடர்ந்து பார்த்திபனும்’ யு அண்ட் மி டியூப்’ என்ற சானலை துவங்கியுள்ளார். முதல் வீடியோவே பீப் பாடலையும் த்தூ-வையும் வைத்து ஒரு ஆல்பம் வெளியிட்டுள்ளார். மேலும் நீங்கள் அதிகமாக பார்த்தால் நிறைய பணம் கிடைக்கும் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
இப்படி எல்லோரும் சொந்தமாக சேனல் துவங்கிவிட்டால், இருக்கும் மீடியாக்கள் என்ன ஆகும்.
விதை நான் போட்டது என கமல் காப்பி ரைட் கேட்காமல் இருந்தால் சரி…..
ithukkum kamalukkum enna connection?
aamam. kamalukkum ithukkum enna connection?