நாளை இந்தியாவின் அணைத்து வங்கிகளிலும் வேலை நிறுத்தம், மூன்று நாட்கள் வங்கிகள் இயங்காது:

strike
தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் உள்ள 3.5 லட்சம் வங்கி ஊழியர்கள் நாளை (ஜன.8 வெள்ளிக்கிழமை) ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஜனவரி 8 அன்று இந்தியாவில் உள்ள அணைத்து வங்கிகளும் பண பரிவர்த்தனை மற்றும் இதர சேவைகள் முடங்கி கிடக்கும். ஜனவரி 9 இரண்டாவது சனிக்கிழமை என்னும் காரணத்தினால் வங்கிக்கு விடுமுறை. ஜனவரி 10 ஞாயிறு என்பதினால் வழக்கமான வார விடுமுறை.

இதன் காரணமாக ஜனவரி 8, 9, 10 ஆகிய மூன்று நாள்கள் தொடர்ந்து வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. வங்கிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் செயபடாமல் இருக்கும் காரணத்தினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.

Leave a Response