எந்திரன் 2.0 சுவாரஸ்ய தகவல்: முக்கியமான வேடத்தில் ரித்திக் ரோசன்..!

endhiran 2_0

‘எந்திரன் 2.0′ படப்பிப்பு சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் துவங்கியது. பலத்த பாதுகாப்போடு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முதல்நாள் படப்பிடிப்பான இன்று சிட்டி ரோபோவை பற்றிய காட்சிகள் படமாக்கப்பட்டன. ரோபோ வெர்சன் 2வாக மாறுவதே அந்த காட்சி.

ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் நடிக்க உள்ளார். ஆனால் அவருடைய கதாபாத்திரம் என்ன என்பது சஸ்பென்சாக வைத்துள்ளனர். அனேகமாக வில்லன் வேடமாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சுமார் 250 கோடி ரூபாயில், இந்த படத்தை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

Satheesh Srini

அன்பான வாசகர்களே, தொடர்ந்து ஒற்றன் செய்தி இணையத்தில் வெளியாகும் செய்திகளை படிக்க மேலே உள்ள முகநூல் பக்கத்தை லைக் செய்யவும். இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்க ஷேர் செய்யவும்

Leave a Response