கோச்சடையான் விவகாரம்: கோர்ட் வாரண்ட் – லதா ரஜினிகாந்திற்கு நெருக்கடி..!

latha rajinikanth kochadaiyan

ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படம் கடந்த 2014-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில்  ‘ஆட் பீரோ’ நிறுவனத்தை சேர்ந்த ‘அபிர்சந்த் நஹர்’ என்பவர் படத்தை தயாரிப்பதற்காக குறிப்பிட்ட தொகையை ‘மீடியாஒன் குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட்’ என்ற நிறுவனத்தை சார்ந்த முரளி மனோகரிடம் கொடுத்து பங்குதாரராக தன்னை இணைத்துகொண்டுள்ளார். இதற்காக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் கேரண்டி கையெழுத்திட்டுள்ளார்.

அவர்கள் ஒப்பந்தப்படி, “தமிழகத்தில் கோச்சடையான் படத்தை வெளியிடும் உரிமையை ‘ஆட் பீரோ’ நிறுவனத்திற்கு வழங்கவேண்டும். தமிழகத்தில் ‘கோச்சடையான்’ திரைப்படத்தின் உரிமையை வேறு யாருக்கும் அளிக்கக்கூடாது. அதைமீறி யாருக்காவது உரிமை அளித்தால், தனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். அதாவது விற்பனைத் தொகையில் 20 சதவீதமும், லாபத்தில் பங்கும் அளிக்க வேண்டும்” என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஒப்பந்தத்தை மீறி மீடியாஒன் நிறுவனம், ஈராஸ் நிறுவனத்திற்கு கோசடையான் திரைப்பட வெளியீட்டு உரிமையை விற்றது. இதன் காரணமாக ‘ஆட் பீரோ’ நிறுவனம் சார்பாக ‘அபிர்சந்த் நஹர்’ வழக்கு தொடர்ந்தார். அதன்பிறகு, மீடியாஒன் நிறுவனம் ஆட் பீரோ நிறுவனத்திற்கு சேரவேண்டிய பணத்திற்கான செக்-யை வழங்கியது. ஆனால் பலமுறை செக் பணமில்லாமல் பவுண்ஸ் ஆகியுள்ளது. இதன் காரணமாக 18வது சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, மீடியா ஒன் மற்றும் அதை சார்ந்த ஏழு இயக்குனர்களை டிசம்பர் 15-ம் தேதி கோர்டில் ஆஜராகவேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் யாரும் ஆஜராகாததால், 8 பேர் மீதும் வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். எனவே, மீடியா ஒன் நிறுவனத்தை சார்ந்தவர்கள் விரைவில் கைதாவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ‘ஆட் பீரோ’ நிறுவனத்திற்கு எதிராக, போலியான ஆவணத்தை லதா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் சமர்பித்ததால், அவர் மீதும் ‘ஆட் பீரோ’ தொடர்ந்த வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், மீடியாஒன் நிறுவனம் சார்பாக கேரண்டி கையெழுத்தும் போட்டுள்ளார் லதா ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த வழக்கு  லதா ரஜினிகாந்திற்கு எதிராகவும் திரும்ப வாய்ப்புள்ளது. மீடியாஒன் குளோபல் நிறுவனம் நிர்வாகிகள் மீது நிடுவர் நீதிமன்றம் புறப்பித்துள்ள வாரண்ட் லதா ரஜினிகாந்த அவர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Satheesh Srini

அன்பான வாசகர்களே, தொடர்ந்து ஒற்றன் செய்தி இணையத்தில் வெளியாகும் செய்திகளை படிக்க மேலே உள்ள முகநூல் பக்கத்தை லைக் செய்யவும். இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்க ஷேர் செய்யவும்

Leave a Response