“கோச்சடையான்” பண பரிமாற்றத்தில் லதா ரஜினிகாந்த் இருந்ததை தொலைபேசி உரையாடல் உறுதி செய்கிறது:

Madhubala Nahar & Latha Rajinikanth

ரஜினிகாந்த் பணியாற்றி, அவருடைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி 2014’ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “கோச்சடையான்”. இப்படம் “மோஷன் கேப்சர்” என்னும் முறையில் நடிகர்களின் உருவங்களை உபயோகித்து தயாரிக்கப்பட்ட ஒரு அனிமேஷன் திரைப்படம். இப்படத்தை “மீடியாஒன் குளோபல் என்டர்டைன்மென்ட்” நிறுவனம் சார்பாக Dr.முரளி மனோகர் தயாரித்தார். இப்படம் தயாரிப்பின் இடையில், பணப்பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் “ஆட் பெரோ” என்னும் நிறுவனம் இணை தயாரிப்பாளர்களாக இணைக்கப்பட்டனர். இந்த ஒப்பந்தத்தில் ரஜினிகாந்த் மனைவி திருமதி லதா ரஜினிகாந்த் அவர்கள் காரண்டாராக ஒப்புக்கொண்ட காரணத்தினால், “ஆட் பெரோ” நிறுவனம் “கோச்சடையான்” திரைப்பட தயாரிப்புக்கு பல கோடி ருபாய் முதலீடு செய்துள்ளது.

“கோச்சடையான்” திரைப்படத்தின் வெளியீட்டு உரிமை “ஆட் பெரோ” நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு, பின்னர் “ஆட் பெரோ” நிறுவனத்தின் ஒப்புதலின்றி “ஈராஸ்” நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. அதன் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது. இது ஒருபுறமிருக்க, “மீடியாஒன் குளோபல் என்டர்டைன்மென்ட்” சார்பாக Dr.முரளி மனோகர் “ஆட் பெரோ” நிறுவனத்திற்கு சில கோடி ருபாய் மதிப்புள்ள காசோலைகள வழங்கியுள்ளார். அதில் சில காசோலைகள், வங்கியில் பணமின்றி திருப்பி அனுப்பட்டன.

இது சம்பந்தமாக “ஆட் பெரோ” நிர்வாகத்தை சார்ந்த இயக்குனர் திருமதி மதுபாலா நஹார், இந்த ஒப்பந்தத்துக்கு காரண்டாராக நின்ற நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் அவர்களை தொலைபேசியில் பல முறை தொடர்புகொண்டு பேசியுள்ளார். மதுபாலா நஹார் பேசிய ஒவ்வொரு முறையும் லதா ரஜினிகாந்த் கண்டிப்பாக பணம் திருப்பி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இப்படி ஒரு சூழல் இருக்க லதா ரஜினிகாந்தும் சரி Dr.முரளி மனோகரும் சரி, இருவரும் “ஆட் பெரோ” நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பி கொடுக்க தவறிவிட்டனர் என சொல்லப்படுகிறது. இது சம்பந்தமாக “ஆட் பெரோ” நிர்வாகம் “மீடியாஒன் குளோபல் என்டர்டைன்மென்ட்”, Dr.முரளி மனோகர், லதா ரஜினிகாந்த் மற்றும் சிலர் மீது நீதிமன்றத்தில் பண மோசடி வழக்கை பதிவு செய்துள்ளனர்.

“மீடியாஒன் குளோபல் என்டர்டைன்மென்ட்” மற்றும் லதா ரஜினிகாந்த் அவர்களின் அலுவலகங்களில் இருந்து இந்த செய்தி சம்பந்தமாக பலமுறை பத்திரிக்கை அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அதில் லதா ரஜினிகாந்துக்கும் இந்த பண பரிமாற்றத்துக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும், அனாவசியமாக லதா ரஜினிகாந்த் மற்றும் அவருடைய குடும்பத்துக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக தான் இந்த செய்திகள் “ஆட் பெரோ” மூலமாக வெளியிடப்படுகின்றன என தெரிவிந்த்துள்ளனர்.

இது சம்பந்தமாக “ஆட் பெரோ” நிறுவனத்தின் இயக்குனர்களின் ஒருவரான மதுபாலா நஹார் அவர்களை தொடர்புகொண்டு விசாரித்தபோது, எதிர் தரப்பினர் கூறும் குற்றச்சாட்டு அனைத்தும் பொய் என்றார். அது மட்டுமின்றி லதா ரஜினிகாந்த் மதுபாலா நாகரிடம் பல முறை தொலைபேசியில் தொடர்புகொண்டு பணத்தை திருப்பி தர அவகாசம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மதுபாலா நஹார் தான் சொல்லுவது உண்மை என உறுதிப்படுத்த, மதுபாலா நஹார் மற்றும் லதா ரஜினிகாந்த் அவர்கள் இருவரும் 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி, இரவு சுமார் 10:16 மணியளவில் தொலைபேசியில் பேசிய உரையாடலை “ஒற்றன் செய்தி” இணையதள ஊடகத்திற்கு பிரத்தியேகமாக கொடுத்து அதை பதிவு செய்ய அனுமதியும் அளித்துள்ளார் மதுபாலா நஹார். அந்த தொலைபேசி உரையாடல் கீழே பதிவிடப்பட்டுள்ளது.
Madhubala Nahar & Latha Rajinikanth 1
Latha Rajinikanth Conversation 19.9.14

Leave a Response