தங்கமகன் படத்திற்கு தடை; போராட்டத்தில் குதிக்கும் சமூக அமைப்புகள்.!

thangamagan-banned

சென்னை வெள்ளத்தில் இருந்து ஒரே நாளில் தமிழக மக்களை திசை திருப்பிய பெருமைக்குரியவர்கள் சிம்பு, அனிருத். ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி பாடியதே இதற்கு காரணம். தமிழகம் முழுவதும் இதற்கு பல்வேறு மகளிர் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். கோவையில் மாதர் சங்க செயலாளர் ராதிகா என்பவர் சிம்பு, அனிருத்தை கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என புகார் கொடுத்துவிட்டார்.

இதனால் சிம்பு, அனிருத்தை கைது செய்ய கோவையில் இருந்து சென்னை வந்த போலீசார், சிம்பு வீட்டில் இல்லாததால், கோர்ட் சம்மனை டி.ஆர்ரிடம் கொடுத்துள்ளனர். முதலில் சம்மனை டி.ராஜேந்தர் வாங்க மறுத்துள்ளார். பின்னர் போலீசாரின் கடுமையான எச்சரிக்கைக்கு பின் சம்மனை பெற்றுள்ளார். இதேபோல், அனிருத் வீட்டிலும் சம்மனை ஒட்டிவிட்டு சென்றுள்ளனர். அந்த சம்மனில், வருகின்ற 19-ம் தேதி கோவை நீதிமன்றத்தில் சிம்பு, அனிருத் இருவரும் ஆஜராகவேண்டும் என்று தனித்தனியாக கோர்ட் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

நிலைமை இவ்வளவு மோசமாக செல்லும் நிலையில், சிம்புவும் அனிருத்தும் வெளிநாட்டில் பதுங்கியுள்ளனர். இந்த சர்ச்சைபற்றி ட்விட்டரில், நான் இசையமைக்கவே இல்லை எனக்கூறி அனிருத் கழன்றுகொள்ள முயன்ற போது, டி.ஆர். மீண்டும் சிக்கவைத்துவிட்டார். இதுவரை சிம்புவும் அனிருதும் இதற்கு யாரிடமும் பகிரங்கமாக மன்னிப்புகோரவில்லை. செய்தது தவறு என ஒப்புக்கொள்ளவும் இல்லை.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் கோபத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளனர். எனவே அடுத்தகட்ட நடவடிக்கையாக சிம்பு, அனிருத் இருவரும் பணிபுரிந்த எந்த படமாக இருந்தாலும் அந்த படத்தை, தடை செய்யவேண்டும் என்று போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டக்காரர்களுக்கு வசதியாக தங்கமகன் படம் இந்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளதால் அனைவரின் பார்வையும் தங்கமகன் படத்தின் மீது திரும்பியுள்ளது.

இந்நிலையில் தங்கமகன் படத்தை தடைசெய்யவேண்டும் என வெளிப்படையாகவே அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகம். மீறி திரையிட்டால், திரையரங்கம் முன்பு போராடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே தங்கமகன் படம் வெளிவருவதில் சிக்கல். அவர்களுடைய அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

– Satheesh Srini

அன்பான வாசகர்களே, தொடர்ந்து ஒற்றன் செய்தி இணையத்தில் வெளியாகும் செய்திகளை படிக்க மேலே உள்ள முகநூல் பக்கத்தை லைக் செய்யவும். இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்க ஷேர் செய்யவும்

IMG-20151215-WA0008 IMG-20151215-WA0010 IMG-20151215-WA0009

Leave a Response