டீ போடு… கேக்கும்போதே நாக்குல எஞ்சில் ஊறுதா..?

tea podu song

விமல், நந்திதா, பசுபதி நடிப்பில் திலிப் சுப்புராயன் தயாரித்த அஞ்சல படத்தில் ‘டீ போடு’ என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். இப்பாடலில் ‘ஓ போடு’ என்ற பிரபலமான வார்த்தையைபோல் ‘டீ போடு’ என்ற பிரபலமான வார்த்தையை வைத்து பாடலை உருவாகியுள்ளனர்.

என்ன தான், ஸ்டார் ஹோட்டல்ல ஏசி ரூம்ல சுட சுட டீ குடிச்சாலும், ரோடோரத்துல உள்ள டீ கடையில், டீ குடிப்பது வித்தியாசமான அனுபவம் தான். யாருடனாவது மொக்க போடணும்னாலும், மணிக்கணக்கா பேசணும் நாளும், வேலைசெஞ்சு மண்டை காஞ்சாலும், உடனே கால்கள் தேடிவருவது இந்த டீ கடைய தான். ஐ.டி. கம்பெனி ஊழியராவே இருந்தாலும், வெளில இருக்குற கடையில ஒரு தம்டீ குடிச்சா தான், நாள் பூராம் வேலையே செய்யமுடியும். இப்படி அருமை பெருமை கொண்ட டீ கடையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் அஞ்சல.

தமிழ் சினிமா பிரபலங்களை வைத்து ‘டீ போடு’ பாடலை உருவாகியுள்ளனர். பிரபலமான நடிகர்களே கையில டீ கிளாசோட பாடுறத கேக்கும் போது, நமக்கே நாக்குல டீ குடிக்கணும்னு எச்சில் ஊறுது… நா டீ கடைக்கு கிளம்பிட்டேன்.. நீங்க..?

-Satheesh Srini

Leave a Response