திரையரங்குகளை ஆக்கிரமிக்கும் அஜித்தின் “வேதாளம்”:

image
சில தினங்களுக்கு முன்பு இதே “ஒற்றன் செய்தி” இணைய இதழில் “அரசியலில் குதிக்கிறார் அஜித்???” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டோம். ஆனால் அந்த செய்தி உண்மையோ அல்லது வெறும் வதந்தியோ என்ற பார்வையிலேயே வாசகர்கள் படித்தனர்.

தீபாவளி நேரத்தில் இரு பெரிய நட்சத்திரங்கள் படம் வெளிவரவுள்ளது. அதில் கமலஹாசன் நடித்துள்ள “தூங்கா வனம்” மற்றும் அஜித் நடித்துள்ள “வேதாளம்” அடங்கும். இதுநாள்வரை கமல் அல்லது ரஜினி நடித்து வெளிவரும் படங்களுடன் வேறு எந்த பெரிய நடிகர்களின் படம் வெளிவந்தாலும், வெறும் திரையரங்குகளிலும் சரி மால்களில் உள்ள திரையரங்குகளிலும் சரி ரஜினி மற்றும் கமலுக்கு தான் பிரதான திரையின் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

இந்த முறை அந்த திரையரங்குகளின் முக்கியதத்துவம் ஒரு பெரிய திருப்பமாக அமைந்துள்ளது. காரணம், அஜித் நடித்துள்ள “வேதாளம்” தமிழகத்திலுள்ள பெரும்பாலான திரையரங்குகளிலுள்ள பிரதான திரைகளை ஆக்கிரமித்துள்ளது. “வேதாளம்” படத்தின் உரிமையை ஒரு பிரபல அரசியல் கட்சி உறுப்பினரின் குடும்பத்தை சார்ந்தவர் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைதியானவர் என்று அனைவராலும் சொல்லப்படும் அஜித்தின் ஆட்டம் இப்போது “வேதாளம்” மூலம் அரங்கேறியுள்ளது.

இன்னும் ஒரு கொசுறு தகவல். அஜித் தன்னுடைய அடுத்த படத்தை நடித்து முடித்த பிறகு, ஆறு மாதங்கள் ஓய்வுக்கு செல்லவிருக்கிறார். அந்த ஓய்வு தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடனும் தனக்கு பிடித்த கட்சி தலைவர்களுடனும் அரசியலை பற்றி கலந்து ஆலோசிப்பதற்காக என்று அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் சொல்கின்றனர்.

Leave a Response