அரசியலில் குதிக்கிறார் அஜித்???

image
“அமராவதி” எனும் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகர் அஜித். காதல் கோட்டை, ஆசை, வாலி போன்ற படங்கள் அவரை பிரபலமாகி ஒரு நட்சத்திர அந்தஸ்தை அவருக்கு பெற்று தந்தது. பைக் ரேசிங்கில் மிகுந்த ஈடுபாடு கொண்டு பல கோப்பைகள் மற்றும் விருதுகளை பெற்ற அஜித், ஒரு விபத்துக்கு பின்னர் பைக் ரேசிலும் சரி நடிப்பிலும் சரி அவரால் சில காலம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்க முடியவில்லை.

நடிகர் அஜித் ஆரம்ப காலத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தவர், பின்வரும் காலங்களில் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை முற்றிலும் தவிர்க்க ஆரம்பித்தார். அதற்கு அவர் சொல்லும் காரணம் தன்னை விளம்பரப்படுத்திகொள்வதில் தனக்கு விருப்பம் இல்லை என்பதாம்.

முந்தைய தி.மு.க ஆட்சியில், அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு தமிழ் திரையுலகம் ஒரு பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்தது. அந்த விழாவிற்கு அப்போதைய தமிழ் திரையுலக சங்கங்கள் அணைத்து நடிகர்களையும் விழாவில் பங்குபெறவேண்டும் என கட்டளையிட்டது. அந்த கட்டளை பாகுபாடுயின்றி, சிறிய முதல் பெரிய நடிகர்கள் வரை அனைவரையும் கலந்துகொள்ள வரவழைக்கப்பட்டது.

அப்போது மேடையில் பேசிய அஜித், தன்னை சிலர் இந்த நிகழ்ச்சியில் கட்டாயப்படுத்தி வரவழைத்தனர் என்றும் பிற்காலத்தில் அவ்வாறு எவரையும் எவரும் கட்டாயப்படுத்த கூடாது என்று கலைஞர், ரஜினி மற்றும் பலர் முன்னிலையில் பேசினார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த ரஜினி, அஜித்தின் துணிச்சலான பேச்சை பார்த்து தனது இருக்கையிலிருந்து எழுந்து அஜித்தை பாராட்டி கை தட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த ஒரு பேச்சில், அஜித் தானும் ஒரு தலைவன் தன்னை எவரும் கட்டாயப்படுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ கூடாது என்பதை திட்டவட்டமாக சொல்லிவிட்டார். இந்த துணிச்சலான பேச்சு, ரசிகர்கள் மத்தியில் அஜித்துக்கு ஒரு படி ப்ரோமோஷனாக அமைந்தது. அப்போது திரை வட்டாரத்தில் அஜித்தின் இந்த செயல் அனைவராலும் பேசப்பட்டது.

அஜித்திற்கு தன்னுடைய சிறு வயதிலிருந்து அரசியலில் ஈடுபடவேண்டும் என்பது ஆசையாக இருந்ததுள்ளது. இதைப்பற்றி அவருடைய சிறு வயது காலங்களில் அவருடைய சக நண்பர்களிடம் பேசுவது வழக்கம் என்று அவருக்கு நெருங்கியவர்கள் சொல்கின்றனர். அஜித் நடிக்க வரவதற்கு முன் தன்னுடைய அரசியல் ஆசை பற்றி தன் தந்தையிடம் பேசுவது வழக்கமாம். அதற்க்கு அவருடைய தந்தை கூடாது என்று திட்டவட்டமாக சொல்லியுள்ளார் என்று நம்பகத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. இந்த சில நம்பகத்தகுந்த செய்திகள் அஜித்துக்கு அரசியல் ஆசை உள்ளது என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.

நடிகர் விஜய்யை அரசியலில் நுழைத்து தனி கட்சி தொடங்கவேண்டும் என்று அவருடைய தந்தை இயக்குனர் எஸ்.எ. சந்திரசேகர் ஆசைபட்டார். அதற்காக அவரும் விஜய்யின் ரசிகர் மன்றங்களை பலப்டுத்தினார். ரசிகர்களின் அலைமோதலினால் விஜய்க்கும் அரசியல் ஆசை அதிகரித்து அவரும் அரசியலில் நுழைய வேண்டும் என்று தீர்மானித்தார். ஆனால் சில அரசியல் கட்சியின் தொடர் தாக்குதலால் அவர் தற்போது அந்த எண்ணத்தையே ஒத்திவைதிருக்கிறார்.

அஜித் வெளியுலகிற்கு தனக்கு அரசியலில் நாட்டமில்லை என்று சொன்னாலும், தன்னை பற்றி விளம்பரம்படுத்திகொள்வதில் விருப்பமில்லை என்றாலும் அதுவே அவருக்கு ஒரு பெரிய விளம்பரமாக அமைந்துவிட்டது என்பது உண்மை.

நடிகர் அஜித்துக்கு புதியதாக கட்சியை ஆரம்பிக்கவேண்டும் என்ற ஒரு எண்ணம் இல்லை என்பது தகவல். ஆனால் பிற்காலத்தில் தனக்கு பிடித்த அந்த தமிழகத்து அரசியல் கட்சியில்(எதுக்கு நாம அந்த கட்சி பெயரை சொல்லணும், உங்களுக்கே அது தெரியும்) இணையலாம் என்று அவருடைய நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் அவர் கூறியிருக்கிறார்.

அஜித்தை சில அரசியல் பிரமுகர்கள் அவ்வப்போது ரகசியமாக சந்தித்து பேசுகிறார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

அஜித் தற்போது நடித்து முடித்திருக்கும் “வேதாளம்” திரைக்கு விரைவில் வரவுள்ளது. இதை அடுத்து தான் நடிக்க இரு படங்களுக்கு கதை கேட்டுள்ளார். அதில் ஒன்று ஆக்ஷன் மற்றொன்று அரசியல் பின்னணியில் அமைந்துள்ள ஒரு கதை. குறிப்பாக இந்த அரசியல் கதை வெற்றிபெறவேண்டும், அதற்கான திரைகதை நன்றாக அமைக்கப்படவேண்டும் என்று அஜித் அந்த இயக்குனரிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

நமக்கு செவி வழி வந்த செய்தி உண்மையெனில் அஜித்தின் அரசியல் ஆசை பற்றி இனி அரசியல் தலைவர்கள் மேடைகளில் விமர்சிக்க ஆரம்பிப்பார்கள்.

அஜித் வெறும் நடிகரா அல்லது அரசியல்வாதியும் கூட! என்பது அவரே வாய் திறந்து சொன்னால்தான் தெரியும்.

Leave a Response