பிரபல கவிஞரின் பேரன் வந்துட்டார் நடிக்க:

image
எம்.ஜி.ஆர் நடித்த் குடியிருந்த கோவில் திரைப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் கவிஞர் புலமைபித்தன்.  அன்று பாடல்கள் எழுத ஆரம்பித்தவர் தொடர்ந்து பல படங்களில் பாடல்களை எழுதி பல விருதுகளுக்கு சொந்தமானவர்.  இவர் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது அரசவை கவிஞராக  நியமிக்க்க்ப்பட்டர். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் தன்னுடைய  அரசவை கவிஞர் பதவியை துறந்தார்.

கவிஞர் புலமைபித்தன் அவர்களின் பேரன் திலீபன் லண்டனில் திரைப்பட கல்லூரியில் திரைப்பட தயாரிப்பு பயிற்சி பெற்றவர்.  திலீபன் தான் 9ஆம் வகுப்பு படிக்கும் போது “ப்ரோக்கன் ட்ரீம்ஸ்” என்னும் குறும் படத்தில் நடித்துள்ளார்.  லண்டனில் தன்னுடைய் படிப்பை முடித்த பிறகு சென்னை வந்த திலீபன், ஜெயராமன் அவர்கள் நடத்தும் கூத்து பட்டறையில் நடிப்பு பயிற்சி பயின்றுள்ளார்.

நடிப்பு பயிற்சி முடித்த பிறகு, திலீபன் ஒரு திரைப்படத்திர்க்கான நடிகர்கள் தேர்வுக்கு சென்றுள்ளார்.  அந்த தேர்வில் 36 புதுமுகங்கள் கலந்த்கொண்டுள்ளனர்.  அந்த 36 பேரில் திலீபன் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  அந்த படம் தான் திலீபன் அறிமுகமாகும் முதல் திரைப்படம் “பள்ளிக்கூடம் போகாமலே”.  இப்படத்தை ஜெயமுருகன் இயக்கியுள்ளார்.  ஐஸ்வர்யா என்னும் புதுமுக பெண் கதாநாயகியாக நடித்துள்ளார்.  இவர்களுடன் மறைந்த தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரி, தேவதர்ஷினி,  ராஜ்கபூர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  இவர்களுடன் கணேஷ் வெங்கட்ராமன் ஒரு கவரவ வேடம் எடுத்துள்ளார்.

இப்படத்தை பற்றி பேசிய திலீபன் கூறியதாவது, இப்படம் 10, 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதை மையமாக கொண்ட படம் என்று தெரிவித்தார்.  இப்படம் மாணவர்கள் மத்தியில் தற்கொலை முயற்சியை தவிர்க்கும் படமாக இருக்கும் என் தெரிவித்தார்.  இப்படம் இந்த மாதம் 30ஆம் தேதி திரைக்கு வரவிர்க்கிறது.

ஒரு கூடுதல் தகவல், திலீபன் ஒரு மிக சிறந்த பைக் ரேசர்.  அது மட்டுமின்றி பைக்கை ஒரு சக்கரத்தில் ஓட்டும் வல்லமை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  2009ஆம் ஆண்டில் பைக் ரேசில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

திலீபன் நடித்து கொண்டிருக்கும் அடுத்த திரைப்படத்தின் பெயர் “எவன்”.  இப்படத்தை துரைமுருகன் இயக்க அதில் திலீபன் கதாநாயகனாகவும், தீப்தி மானே கதாநாயகியாக நடிக்கின்றனர்.

Leave a Response