அஜித் வீட்டிலிருந்து கிளம்பி இருக்கும் விஜய் ரசிகர்:

image
மெட்ராஸ் என்டர்பிரைசர்ஸ் சார்பாக நந்தகோபால் தயாரிக்கும் படம் “வீர சிவாஜி”.  இந்த படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாகவும், நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின்  தங்கை ஷாமிலி கதாநாயகியாக நடிக்கின்றனர்.  இப்படத்தை கணேஷ் இயக்குகிறார்.  இவர் இதற்கு முன்பு அருள்நிதி நடித்த “தகராறு” திரைப்படத்தை இயக்கியவர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.  வீர சிவாஜி என்ற இந்த படத்தின் பெயர் தற்காலிகமே என்றும் கதைக்கு பொருத்தமான.வேறு ஒரு பெயர் விரைவில் சூட்டப்படும் என சொல்லப்படுகிறது.
image
இந்த திரைப்படத்தில், நடிகர் அஜித்தின் உறவு பெண்ணான ஷாமிலி இளையதளபதி விஜய்யின் தீவிர ரசிகை கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக பட வட்டாரத்தில் பேசப்படுகிறது.  இது மட்டுமின்றி இப்படத்தில் ஷாமிலி, விஜய்க்கு கட்டவுட் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஷாமிலி தன்னுடைய நிஜ வாழ்க்கையில் ஒரு விஜய் ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Response