வலிமை – திரை விமர்சனம்

இயக்கம் – ஹெச் வினோத்
நடிகர்கள் – அஜித்குமார், ஹூமா குரேஷி

ஒரு தற்கொலை கேஸை கண்டுபிடிக்க செல்லும் காவல் அதிகாரி அதன் பின்னால் இருக்கும் மிகப்பெரும் க்ரைம் நெட்வொர்க்கை கண்டுபிடிக்கிறார். அதில் அவரது தம்பி பலியாக தன் குடும்பத்தை காப்பாற்றி வில்லனை ஜெயித்தாரா நாயகன் என்பதே கதை.

அஜித் நடிப்பில் 3 வருடங்களாக தயாரிப்பில் இருந்த படம், ஒரு வழியாக ரசிகர்களின் ஏக்கம் தீர்க்க திரைக்கு வந்துள்ளது. அவர்களின் நீண்ட கால ஏக்கத்த்தை சரியான ஆக்சன் படமாக உருவாக்கி ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளது.

ஒரு பக்கம் குடும்பம் இன்னொரு பக்கம் கோடுர வில்லன் இரண்டையும் சமாளிக்கும் நாயகனாக அஜித் அதகளப்படுத்தியிருக்கிறார்.

அஜித் என்றவுடன் என்னெவெல்லாம் ஞாபகத்திற்கு வருமோ அதை அப்படியே படத்திற்குள் திரைக்கதையாக்கி ரசிகர்களை அதிர வைக்கிறது படக்குழு.

படத்தில் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளார்கள், மதுரையில் ஆரம்பிக்கும் படம் சென்னைக்கு வந்தவுடன் தீப்பிடித்த மாதிரி செல்கிறது. இன்டர்வெல் பைக் சேஸ், ஃபைட், அடுத்து வரும் வேன் ஃபைட் இரண்டும் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் பாணியில் படமாக்கப்பட்டிருக்கிறது.

சக மனுஷன கொல்ற உரிமை நமக்கு கிடையாது, சிஸ்டம் சரியா இருக்கனும்னா நாம சரியா இருக்கனும், என அஜித் பேசும் வசனங்கள் தீப்பொறி. அஜித்தின் ப்ளஸ்களை சேர்த்து அதில் சாத்தான் அடிமை எனும் விசயத்தை புகுத்தி பரபரப்பான படம் தந்ததில் மிளிர்கிறார் வினோத். பைக் சேஸிங் காட்சிகளில் யுவன் இசை அட்டகாசம்.

வெறும் ஆக்சன் ரசிகர்களை மட்டும் திருப்தி படுத்தாமல் குடும்ப ரசிகர்களும் கொண்டாடும் விதத்தில் குடும்பத்தை கதையில் சேர்த்தது அருமை. சண்டைக்காட்சிகள், க்ளைமாக்ஸ் எல்லாம் நீரவ் ஷா பிரமிக்க வைத்துள்ளார்.

ஒரு அருமையான திரை விருந்து “வலிமை”.

வலிமை அதுவே இப்போதைய தேவை.

Leave a Response