நடிகர் விஜய் மற்றும் பலரின் மீது நடத்தப்பட்ட வருமான வரி சோதனையை தொடர்ந்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜவிடம் விசாரணை:

Gnanavelraja crying
விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த புலி வெளியாவதற்கு முன்தினம் நடிகர் விஜய், புலி பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா, தயாரிப்பாளர் கலைபுலி தாணு, பைனான்சியர்ஸ் மதுரை அன்பு மற்றும் ரமேஷ் பண்டாரி மற்றும் சில சினிமா பிரபலங்களின் இல்லங்களில் மற்றும் அவர்களுடைய அலுவலகங்களில் வருமானவரி துறையினர் தொடர்ந்து இரு நாட்கள் சோதனையிட்டனர். அதன் காரணமாக அக்டோபர் 02, 2015 அன்று காலை 8:௦௦ மணிக்கு வெளியாகவிருந்த “புலி” திரைப்படம் சுமார் 11:௦௦ மணிக்கு வெளியாகியது.

அந்த சோதனையில் அனைவரிடத்திலும் பல முக்கிய தஸ்தாவேஜுகள் சிக்கியுள்ளன. புலி பட தயாரிப்பாளரிடம் சோதனையிட்டதில் சுமார் இரண்டரை கோடி ருபாய் மதிப்புள்ள தங்க நகைகள் வருமானவரி துறையினறினால் கைபற்றப்படுள்ளது. பிரபல திரைப்பட பைனான்சியர் மதுரை அன்பு அலுவலகத்தில் மற்றும் அவருடைய வீடுகளில் சோதனையிட்டதில் பல கோடி ருபாய் ரொக்க பணம், தஸ்தாவேஜுகள், வீடு மற்றும் நில பத்திரங்கள் சிக்கியுள்ளன. இதை தவிர்த்து சில முக்கிய பண குறிப்புகள் எழுதப்பட்டுள்ள சீட்டுகள் மதுரை அன்புவிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த சீட்டுகளில் அன்பு யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிட்டிருந்திருக்கும் என சந்தேகிக்கபடுகிறது.

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக்கு உறவினருமான “ஸ்டுடியோ கிரீன்” கே.இ.ஞானவேல்ராஜாவை வருமானவரி துறை அதிகாரிகள் அக்டோபர் 05, 2015 அன்று காலை அவர்களுடைய அலுவலகத்திற்கு அழைத்துள்ளனர். காலை அங்கு சென்ற ஞானவேல்ராஜாவை, அதிகாரிகள் மதியம் வரை துருவி துருவி விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் ஞானவேல்ராஜாவை மதிய உணவுக்கு சென்று பிறகு மாலை வர கட்டளையிட்டுள்ளனர். மதியம் அங்கிருந்து உணவுக்கு சென்ற ஞானவேல்ராஜா மீண்டும் வருமானவரி துறை அலுவலகத்துக்கு செல்லாமல் தன்னுடைய இல்லத்திலிருந்து சென்று அங்கிருந்து சில முக்கிய ஆவணங்களை ராமாபுரத்தில் உள்ள தன்னுடைய மற்றொரு அலுவலகத்திற்கும் வேறு சில இடங்களுக்கும் கொண்டு சென்றுள்ளார். இந்த நடவடிக்கைகளை வருமானவரி துறை அலுவலர்கள் மற்றும் இன்பார்மர்கள் கவனித்து கொண்டிருந்திருக்கின்றனர்.

பின்னர் அக்டோபர் 05, 2015 இரவு சுமார் 11:50 மணியளவில் வருமானவரி துறை அலுவலர்கள் ராமாபுரம் அலுவலகத்திற்கு வந்து விசாரித்து விட்டு சென்றுள்ளனர். மீண்டும் வருமானவரி துறையினர் அவரிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ளமாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கையில் டி.நகரில் உள்ள தன்னுடைய வீட்டில் இருந்துள்ளார் ஞானவேல்ராஜா. மறுநாள் அதாவது அக்டோபர் 06, 2015 திடீரென வந்தது மீண்டும் அந்த வருமானவரி துறையினரின் தொல்லை. இம்முறை காலை 8:௦௦ மணிக்கெல்லாம் இரண்டு வேன்களில் சுமார் இருபதுக்கும் அதிகமான வருமானவரி துறை அதிகாரிகள் ஞானவேல்ராஜாவின் வீட்டில் ஆஜர். அங்கிருந்த ஞானவேல்ராஜா மற்றும் அவருடைய குடும்பத்தினரை வருமானவரி துறையினர் தொடர்ந்து துருவி துருவி விசாரணை நடத்தியுள்ளதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. பின்னர் வருமானவரி துறை அதிகாரிகள் சுமார் 1:௦௦ மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக அக்கம் பக்கத்தினர் சொல்கிறார்கள்.

ஞானவேல்ராஜா தன்னுடைய படங்களுக்கு மதுரை அன்புவிடமிருந்து அவ்வப்போது பணம் வாங்குவது வழக்கம். மதுரை அன்பு பெரும்பாலாக கருப்பு பணத்தை கடனாக தருவது வழக்கம் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. எனவே மதுரை அன்புவிடம் யார், யார் பணம் வங்கியுள்ளனரோ அவர்களிடம் வருமானவரி துறையினர் விசாரணை நடத்துகின்றனரா? என அன்புவிடம் கடன் வாங்கியுள்ள மற்ற சினிமா தயாரிப்பாளர்கள் முனுமுகின்றனர்.

வருமானவரி துறையினரின் இந்த வேட்டை, சினிமா துறையில் இனி அவ்வப்போது திடீர் திடீர் என நடக்கும் என சொல்லப்படுகிறது.

Leave a Response