இந்த ரெய்டுக்கும், தமிழக அரசுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல அமைச்சர் ஜெயக்குமாரின் பொளேர்!

Jayakumar
சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 187 இடங்களில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லம், ஜெயா டி.வி இயக்குநர் விவேக் இல்லம், மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் இல்லம், ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் புகழேந்தி இல்லம், டி.டி.வி தினகரன் இல்லம், சசிகலா குடும்பத்தினர் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களின் இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. சுமார் 1800 அதிகாரிகள் மொத்தமாக இந்த சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதே போன்று கொடநாடு எஸ்டேட், மிடாஸ் மதுபான தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த ரெய்டு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், தன்னையும், சசிகலாவையும் அரசியலில் இருந்த விரட்டுவதற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர்தான் காரணம் என்றும் அவர்களை சும்மா விடமாட்டேன் என்றும் ஆவேசமாக தெரிவித்தார்.

இந்நிலையில் அஸ்ஸாமில் இன்று நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக செல்லும் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்:-

வருமானவரித்துறை திடிரென நடத்தும் இந்த சோதனைக்கும், அ.தி.மு.க., அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்தார். மேலும் வரிமானவரித்துறையினர் தங்களுக்கு கிடைந்தத தகவல்களின் அடிப்படையிலேயே சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

Leave a Response