“கத்துக்குட்டி” திரைப்பட விமர்சனம்:

Kathukutty
மீதேனை அறவே எதிர்த்து குரல் கொடுக்கும் படம் தான் “கத்துக்குட்டி”. இப்படத்தில் நரேன் நாயகனாகவும், சிருஷ்டி டாங்கே நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் நரேனின் நண்பராக சூரி, நரேனின் தந்தையாக ஜெயராஜ்(இயக்குனர் பாரதிராஜாவின் தம்பி), அரசியல்வாதியாக ஞானவேல் மற்றும் ராஜ, காதல் சந்தியா, காதல் சரவணன், சித்தன் மோகன், தேவிப்ப்ரியா நடித்துள்ளனர்.

இரா.சரவணன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், முதன்மை படத்தொகுப்பு, இயக்கம் என பல தொழில்நுட்பங்களை கையாண்டுள்ளார். ஒலிபதிவை சந்தூஷ் ஸ்ரீராமும், இசையை அருள்தேவும் கவனித்துள்ளனர். பாடல்கள் சிநேகன், இரா.சரவணன் மற்றும் பாலகிரிஷ்ணன் எழுதியுள்ளனர். எம்.அன்வர் கபீர், ஆர்.ராம்குமார் மற்றும் பி.ஆர்.முருகன் தயாரித்துள்ளனர்.

தென் தமிழ்நாட்டில் சில வருடங்களாக மக்களை பீதிக்குள் ஆளாகியுள்ளது மீதேன் என்னும் அமிலம். அதாவது. மீதேணினால் பல வகையில் இந்தியாவுக்கு வருமானை, வளர்ச்சி என்று சொல்லி தென் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் விலை நிலங்களை அரசு வற்புறுத்தி புடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை சினிமாத்தனமாக காதல், சண்டை, அரசியல், குடும்பம் பாசம் என அனைத்தும் கலந்து இயக்கியுள்ளார் இரா.சரவணன்.

நரேன் தன்னுடைய கல்லுரி படிப்பில் தங்க பதக்கம் வென்றிருந்தாலும், தான் எந்த ஒரு தொழில் புரிவதற்காகவும் தன் கிராமத்தை விட்டு செல்லாமல் தன்னுடைய முன்னோர்களின் விவசாயத்தையே செய்கிறார். தன் கிராமத்தில் வரவிற்கும் மீதேன் ஆராய்ச்சிக்கான நில கையகப்படுத்துதலை எதிர்க்கும் அரசியல்வாதியாக நரேனின் தந்தை ஜெயராஜ் அவ்வப்போது அரசு அதிகாரிகளுடன் பஞ்சாயத்துக்கு செல்வதும், வரும் சில அதிகாரிகளை வழியிலேயே நரேன் தெருத்துவதும் அழகாக கட்சி அமைகப்படுள்ளது.

படத்தின் துவக்கத்தில் நாயகி சிருஷ்டி டாங்கே நரேனை வெறுப்பதும் பின்னர் நரேனை பற்றி சிருஷ்டியின் தந்தை ராஜா எடுத்து சொல்வதும் யதார்த்தமாக சொல்லப்பட்டுள்ளது. சூரியின் காமெடி எப்போதும் போல்.

ஒரு கட்டத்தில் தங்களுடைய கிராமத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதில் போட்டியிட ஜெயராஜ் ஒரு கட்சியில் முயற்சிப்பதும், ஞானவேல் வேறு ஒரு கட்சியில் முயற்சிப்பார். அப்போது இரு கட்சி தலைமையும், இளைஞர்களுக்கு முன்னுரிமை என்று சொல்லி நிராகரிப்பதும் அவர்களின் வெளிப்பட்டும் அழகாக சிதரிக்கப்படுள்ளது.

பின்னர் தேர்தலில் ஜெயராஜ் மற்றும் ஞானவேல் போட்டியிடுகிரார்களா, தங்கள் கிராமத்தில் வந்திருக்கும் மீதேன் ஆராய்ச்சி எவ்வாறு முறியடிக்கப்படுகிறது என்பத்தான் மீதமுள்ள கதை. இப்படத்திற்கு “கத்துக்குட்டி” என்று பெயரிடப்பட்டுள்ளது தான் ஒரு பெரிய குறைப்பாடு.

உலகில் மீதேன் என்னும் கொடிய அமிலத்தை எடுப்பதற்காக விலை நிலங்கள் அழிந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் “கத்துக்குட்டி” ஒரு நல்ல வரப்பிரசாதம். “கத்துக்குட்டி” என்ற பெயரை பார்த்து பார்வையாளர்கள் ஒரு சுமாரான படம் என்று எண்ணாமல் சமுதாயத்திற்கு தேவையான படம் என்று புரிந்துகொண்டு வந்தால் நீங்கள் சமுகத்துக்கு செய்யும் ஒரு நேர்த்தியாக இருக்கும்.

Leave a Response