நடிகர்கள் சரத்குமார் மற்றும் ராதாரவி மீதான புகார் மீது விசாரணை மேற்கொள்ள நீதிபதி உத்தரவு. கைதாவர்களா?

Complaint against Sarathkumar & Radharavi
சென்னை குன்றத்துரை சேர்ந்த ஜி.பாலாஜி என்பவர் ஜூலை 26, 2015 அன்று சென்னை வடபழனியிலுள்ள தென்னிந்தியா இசை அமைப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற தெனிந்திய திரைப்பட மற்றும் நாடக நடிகர்கள் சங்கத்தின் கூட்டத்தில் தன்னுடைய மனைவியுடன் கலந்து கொள்ள சென்றுள்ளார். பாலாஜி தெனிந்திய திரைப்பட மற்றும் நாடக நடிகர்கள் சங்கத்தின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பாலாஜி மற்றும் அவருடைய மனைவி இருவரையும் கூட்டம் நடக்கும் அரங்கிற்குள் நுழையவிடாமல் சமத்துவ மக்கள் கட்சி உறுப்பினர்களால் தடுக்கப்பட்டதாகவும், சுமார் பதினைத்து பேர் கொண்ட அக்கட்சியினரால் தான் தாக்கப்பட்டதாக அன்றே வடபழனி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளதாக தெரிகிறது. தன்னுடைய புகாரில், சரத்குமார் மற்றும் ராதாரவி அவர்களின் அறிவுருதளினால் தான் அவர் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வடபழனி காவல் நிலையத்தில் அவருடைய புகார் பெறப்பட்டு என்:439/2015 தேதி:26.07.2015 குறிப்பிட்ட சி.எஸ்.ஆர் வழங்கப்பட்டுள்ளது. நீதித்துறைக்கு தான் அளித்துள்ள மனுவில், தன்னுடைய புகார் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். அதே மனுவில், தான் தனக்கு தெரிந்த நபர்களிடம் விசாரிக்கையில் தன்னை அடித்தது கிச்சா ரமேஷ் என்று குறிப்பிட்டுள்ளார். ஆகையால் நீதிபதி அவர்கள் காவல் துறையினர், தன்னுடைய புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்திரவிடவேண்டும் என்று நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ள தன்னுடைய மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் அவர்கள் சென்னை காவல் துறை ஆணையாளர் மற்றும் வடபழனி காவல் துறை ஆய்வாளர் அவர்களை விசாரணை மேற்கொள்ள கட்டளையிட்டுள்ளனர். அது மட்டுமின்றி விசாரணையில், இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள புகார் உண்மை என்னும் பட்ச்சத்தில் இந்த புகார் பதிவு செய்யப்படவேண்டும் என்று ஆணையிட்டுள்ளார் நீதிபதி.

பாலாஜி அவர்கள் அளித்துள்ள புகாரில் உண்மை இருக்குமமெனில், கிச்சா ரமேஷ், சரத்குமார், ராதாரவி மற்றும் பாலாஜியை தாக்கிய மற்றவர்கள் மீது காவல் துறையினர் கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம் என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நடிகர் சங்க தேர்தல் இன்னும் சில தினங்களில் நடைபெறவிருக்கும் நேரத்தில் சரத்குமார் மற்றும் ராதாரவி மீது உள்ள புகார் மீது நடவடிக்கை மேற்கொள்ள நீதிபதி உத்திரவிட்டிருப்பது நடிகர்களிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Affidavit - 1

Affidavit - 2

Affidavit - 3

Court Order - Page 1

Court Order - Page 2

Leave a Response