சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு கிழக்கு கடற்கரை ரெயில் தடம் மற்றும் படகு சேவை : பொன்.ராதாகிருஷ்ணன்..

pon radhakrishnan

நாகர்கோவிலில் இன்று நடந்த இரட்டை ரெயில் மின்பாதைக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மாதமே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஒக்கி புயல் காரணமாக விழா தள்ளி வைக்கப்பட்டு இப்போது நடக்கிறது.குமரி மாவட்ட மக்களின் 40 ஆண்டுகால கனவு இன்று நனவாகி உள்ளது. நாகர்கோவிலில் இருந்து மதுரை- வாஞ்சிமணியாட்சி- தூத்துக்குடி, வாஞ்சிமணியாட்சி- நெல்லை- நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையிலான ரெயில் பாதையை மின்மயமாக்குவதோடு, இரட்டை ரெயில் பாதை அமைக்க ஏற்கனவே திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது என்று கூறினார்.

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு கிழக்கு கடற்கரை சாலை மற்றும் கிழக்கு கடற்கரை ரெயில் தடம் அமைக்க 2008-2009-ம் ஆண்டில் ஆய்வுகள் நடந்தது. அதன்பின்பு இப்பணி கிடப்பில் போடப்பட்டது. இப்போது மீண்டும் அந்த பணியை தொடங்கி நிறைவேற்ற நான் முயற்சி மேற்கொண்டு உள்ளேன். ஆய்வு பணிகள் முடிவடைந்து இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் அடிக்கல் நாட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம். இது போல கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு படகு சேவை நடத்தவும் ஆய்வு நடக்கிறது. இப்பணி முடிந்து படகு சேவை தொடங்கும் போது குமரி மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும். விரைவில் விமான நிலையமும் அமைய உள்ளது.
நாகர்கோவிலை மையமாக வைத்து தனி ரெயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என்று இங்கு வந்துள்ள ரெயில்வே இணை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். இதற்காக ஒரு மணி நேரம் பேசியுள்ளேன்.

Leave a Response