ரவுடி இல்ல – லிங்குசாமி மறுப்பு!!

Lingusamy-at-Siima-day-02-Award-Ceremony-Photo

‘சிங்கம் 2’ படத்துக்கு பின் சூர்யா நடிக்கும் படத்துக்கு ‘ரவுடி’ என பெயர் வைத்துள்ளதாக இணைய தளங்களில் செய்திகள் பரவின. இந்நிலையில் சூர்யா படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என லிங்குசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லிங்குசாமி கூறும் போது, ‘சூர்யாவை வைத்து நான் இயக்கும் படத்துக்கு ‘ரவுடி’ என பெயர் வைத்துள்ளதாக பரவியுள்ள செய்தி உண்மையல்ல. படத்துக்கான தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும். சூர்யா  ஜோடியாக சமந்தா நடிக்கிறார்” என்றார்.