பல் டாக்டரை மணக்கும் நடிகர் பரத்!

barath-bday-26

‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆன பரத், இதுவரை 24 படங்களில் நடித்திருக்கிறார். பாலாஜி சக்திவேல் டைரக்டு செய்த ‘காதல்’ படத்தின் மூலம் சிறந்த நடிகர் என்ற பெயர் பெற்றார். சமீபத்தில் திரைக்கு வந்த ‘ஐந்து ஐந்து ஐந்து’ இவருடைய 24-வது படமாகும்.

இவருக்கும் நடிகை ஒருவருக்கும் காதல், இருவரும் திருமணம் என்றெல்லாம் செய்திகள் வெளியாகி வந்தன. இதனை பொய்யாக்கும் விதத்தில் பரத் தனது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பரத்தும், துபாயில் பல் டாக்டராக இருக்கும் ஜெஸ்லி என்பவருக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக காதல் இருந்து வந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். இவர்கள் காதலை இரண்டு பேர்களின் பெற்றோரும் ஏற்றுக் கொண்டார்கள். அதைத் தொடர்ந்து பரத் – ஜெஸ்லி இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் திருமணம் செப்டம்பர் 9ந்தேதி சென்னையில் நடக்கிறது. செப்டம்பர் 14-ந்தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது.

காதல் திருமணம் செய்து கொள்வது பற்றி நடிகர் பரத் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது, “ஜெஸ்லியை சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது, தற்செயலாக சந்தித்தேன். 2 பேரும் நட்புடன் பழக ஆரம்பித்தோம். பின்னர் அதுவே காதலாக மாறியது. 2 பேரும் காதலை பகிர்ந்து கொண்டோம். திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தோம்.

எங்கள் திருமணத்திற்கு 2 குடும்பங்களை சேர்ந்தவர்களும் சம்மதம் தெரிவித்தார்கள். பெற்றோர்கள் சம்மதத்துடன் நானும், ஜெஸ்லியும் திருமணம் செய்து கொள்கிறோம். ஜெஸ்லி பி.டி.எஸ். படித்தவர். துபாயில் பல் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். திருமணத்துக்கு பின் எம்.டி.எஸ். படிக்க முடிவு செய்திருக்கிறார்”. இவ்வாறு பரத் கூறினார்.