நாக சைதன்யா – அமலபால் – பிரபு நடிக்கும் “விக்ரம் தாதா”!

bezawada

நந்தினி வழங்கும் ஸ்ரீ லஷ்மிஜோதி கிரியேசன்ஸ் பட நிறுவனம் ஏற்கனவே பிசினஸ்மேன், டைகர் விஷ்வா போன்ற படங்களை தமிழிலும், அதூர்ஷ், நாயக் போன்ற படங்களை மலையாளத்திலும் தயாரித்துள்ளது. ஸ்ரீலஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக A.N.பாலாஜி, கோவிந்தராஜ் இருவரும் இணைத்து தயாரிக்கும் படம் “விக்ரம் தாதா”. தெலுங்கில் பெஜவாடு என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் விக்ரம் தாதாவாகி இருக்கிறது.

இப்படத்தில் நாகசைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். கதாநாயகியாக அமலாபால் நடிக்கிறார். கோட்டா சீனிவாசராவ், அஜெய், அபிமன்யூ சிங், முகுல்தேவ், சுபலேகா சுதாகர், அகுதி பிரசாத், சத்ய பிரகாஷ், பிரமானந்தம், அஞ்சனா சகானி மற்றும் எம்.எஸ்.நாராயண் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – S.K. பூபதி. இசை – அல்மொகிலே, பிரதீப் கொனேரு, பிரேம். வசனம் எழுதி தமிழாக்கம் பொருப்பேற்றிருப்பவர் – A.R.K.ராஜராஜா. இயக்கம் – விவேக் கிருஷ்ணா.

ஊரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மிகபெரிய புள்ளியின் வலதுகரமாக திகழும் ஒருவன் சந்தர்ப்பவசத்தால் குற்றவாளியாக்கப்படுகிறான். அவனை மீட்டெடுக்கும் தம்பியின்  ஆக்க்ஷன் படம்தான் “விக்ரம் தாதா”. நாக சைதன்யா மிகப்பெரிய ஆக்க்ஷன் அவதாரம் எடுத்திருக்கும் படம் இது. படத்தில் அமலா பால் கிளாமர் வேடத்தில் நடிக்கிறார்.