மீண்டும் ஹீரோவாகும் கவுண்டமணி!

gounda

சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த கவுண்டமணி அதிரடியாக தனது அடுத்த இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார். அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவற்றில் இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்கிறார்.

இதுவரை 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கவுண்டமணி. 12 படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். இடையில் எத்தனையோ படங்களில் வாய்ப்புகள் வந்தும் அவர் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. தங்கம் படத்துக்குப் பிறகு இப்போது தான், சாந்தனுவுடன் ‘வாய்மை’ என்ற படத்தில் நடித்து வருகிறார் கவுண்டமணி.

அதைத் தொடர்ந்து ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறார். கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த ஆரோக்கியதாஸ் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்திற்கு ’49ஓ’ என பெயர் வைத்திருக்கிறார்கள். இதில், விவசாயி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கவுண்டமணி. அவருடன் சத்யன், விடிவி கணேஷ், சோமசுந்தரம் ஆகியோர் நடிக்கிறார்கள். இது விவசாயிகள் பிரச்சினைகளைப் பேசும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.