விமலின் தேசிங்குராஜா 350 தியேட்டர்களில் வெளியாகிறது!!

Desingu-Raja-Songs

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் மதன் வழங்க ஒலிம்பியா மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “தேசிங்கு ராஜா”. விமல் கதாநாயகனாக நடிக்கிறார். பிந்து மாதவி காதாநாயகியாக நடிக்கிறார். சூரி, சிங்கம் புலி, சாம்ஸ், சிங்கமுத்து, வினு சக்ரவர்த்தி, ரவிமரியா, வனிதா, வே.ஆ.மூர்த்தி, வி.ஞானவேல், சாமிநாதன் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – சூரஜ் நல்லுசாமி. இசை – டி. இமான். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் எஸ். எழில்.

“தேசிங்கு ராஜா” படம் இம்மாதம் 23 ஆம் தேதி 350 திரையரங்குகளில் வெளியாகிறது. விமல் கதாநாயகனாக நடித்து அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் படம் தேசிங்கு ராஜாதான் என்று எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் மதன் அவர்களும் இயக்குனர் எழில் அவர்களும் கூறினார்கள்.

ஏற்கனவே விமல் காமெடியில் கலக்கி எடுப்பார் இந்த படத்திலும் காமெடியில் கலக்கி இருக்கிறார் கூடவே சூரி உட்பட பல நடிகர்களும் காமெடியில் கூட்டு சேர்ந்து கலக்கி இருக்கிறார்கள்.