வீரத்துக்காக ரயில்மீது சண்டை போட்ட அஜித்!

ajith

சமீபத்தில் தான் அஜித் நடித்த விஷ்ணுவர்த்தன் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. அடுத்த படத்தின் பெயர் எப்போ வருமோ என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இப்போதே அறிவித்து விட்டார்கள். படத்தின் பெயர் வீரம். படத்தின் கதைக்கேற்பவே வீரம் என்று தலைப்பு வைத்துள்ளனர். கதைக்கேற்ப மட்டுமல்ல, படத்தின் காட்சிகளுக்கு ஏற்பவும் தலைப்பு அமைந்துள்ளது.

ஆம். சமீபத்தில் இந்தப் படத்துக்காக ஓடும் ரயிலில் அஜீத் போட்ட சண்டையைப் பற்றித் தான் யூனிட்டில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். ஒடிஷா – ஆந்திரா எல்லையில் உள்ள ரயில் பாதையில் இந்த காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தென் கிழக்கு ரயில்வேயில் முறையான அனுமதி பெற்றுள்ளனர்.

அஜீத் ஜோடியாக தமன்னா நடிக்கும் இந்தப் படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்குகிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.