ஆகஸ்ட் 15-ல் ஆதலால் காதல் செய்வீர்!

556737_534224236626573_1198492473_n

“ராஜபாட்டை’’ என்ற கமெர்சியல் ஆக்ஷன் படத்துக்கு பிறகு, மென்மையான காதல் பக்கம் திரும்பியுள்ள சுசீந்திரன் இயக்கியுள்ள படம் ‘‘ஆதலால் காதல் செய்வீர்’’. படம் முடிந்து ஓராண்டு ஆகியும் வெளியாகாமல் இருந்த இந்த படம் ஆகஸ்ட் 15-ம்தேதி சுதந்திர தினத்தில் வெளியாகிறது.

படத்தின் ஹீரோவாக சந்தோஷ் நடிக்கிறார். இவர் லயோலா கல்லூரியின் 2ம் ஆண்டு மாணவராம். ‘வழக்கு எண் 18/9’ படத்தில் நடித்த மனீஷா யாதவ் ஹீரோயின். இவர்கள் தவிர, லயோலா மற்றும் எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி மாணவர்களும் கூட நடித்துள்ளனராம். நீண்ட இடைவெளிக்கு பின்னர் பூர்ணிமா பாக்யராஜ் இப்படத்தில் நடித்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். பாடல்களை வாலியும், யுகபாரதியும் எழுதியுள்ளனர். தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் சொல்லாத காதல் கதையாகவும், மற்ற படங்களில் இருந்து வித்தியாசமாகவும் இப்படம் இருக்கும் என்று கூறியுள்ளார் சுசீந்திரன். இதற்கு முந்தைய வாரம் ஆகஸ்ட் 9ஆம் தேதி தான் விஜயின் தலைவா வெளியாவது குறிப்பிடத்தக்கது.