போராடி ஜெயித்த தலைவா! ‘யு’ சான்றிதழ்!!

thalaiva

விஜய், அமலாபால் நடித்துள்ள படம் தலைவா. மும்பை தமிழர்களுக்காக போராடும் தலைவனின் கதை. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடி. வருகிற 9ந் தேதி ரம்ஜான் பண்டிகை அன்று வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டார்கள். இதற்கிடையில் தலைவா படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் அதற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்தனர்.

படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக தணிக்கை குழு கூறியது. இதனால் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பினார். அவர்கள் படத்தை பார்த்து விட்டு யு சான்றிதழ் வழங்க ஒப்புக் கொண்டனர். ஆனாலும் ஒரு சில காட்சிளை நீக்க வேண்டும். சில காட்சிகளின் நீளத்தை குறைக்க வேண்டும் என்றனர்.

இதனை தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து படத்துக்கு தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து படம் ரம்ஜான் வெளியீடாக ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகிறது.