ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் நயன்தாரா!

tamil-actress-nayanthara-2012-latest-photos-images-stills14

AGS தயாரிப்பில் ஜெயம் ராஜா இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார் என கிசுகிசுக்கள் பரவின. அது உண்மைதான் என்று நயன்தாரா உறுதிபடுத்தி உள்ளார்.

இது குறித்து நயன்தாரா கூறும் போது, “ஜெயம் ரவியுடன் நடிக்க கேட்டு என்னிடம் கதை சொன்னார்கள். கதை மிகவும் பிடித்தது. எனது கேரக்டர் சிறப்பாக இருந்தது. முதன் முறையாக ஜெயம் ரவியுடன் ஜோடியாக இந்த படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

இந்த படம் குறித்து டைரக்டர் ராஜா கூறும்போது, “இது நான் டைரக்டு செய்யும் ஏழாவது படம். ஆக்ஷன், குடும்ப சென்டிமென்ட்டில் புதிய கோணத்தில் இப்படத்தின் கதை இருக்கும் என்றார். செப்டம்பரில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.