இமான் இசையில் பாடிய ஸ்ருதிஹாசன்!

why-this-kolaveri-shruti-hassan

வி.செங்கையா வழங்கும் ரவிபிரசாத் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான “அலா மொதலைன் தி” என்ற படத்தின் தமிழ் பதிப்பு. வேகமாக வளர்ந்து வரும் இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.  இதில் கெளதம் கார்த்திக், ராகுல் பிரீத் சிங், நிக்கேஷா பட்டேல் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். ப்ரியதர்ஷன் உதவியாளர் ரவி தியாகராஜன் டைரக்ட் செய்கிறார்.

காதலுக்கு முக்கியத்துவம் நிறைந்த இந்த கதைக்கு டி.இமான் இசை அமைக்கிறார். இவர் இசையில் இப்படத்திற்காக இசை அமைப்பாளர் அனிருத் ஒரு பாடல் பாடியுள்ளார். இப்பொழுது மதன் கார்கி எழுதிய “ஷேடப் யுவர் மவுத்” என்ற பாடலை ஸ்ருதிஹாசன் பாடினார். அவருடன் சேர்ந்து தீபன் பாடினார். மிடில் ஈஸ்டர்ன் எனப்படும் அரேபியன் ஸ்டைல் பாடலை தான் முதன் முதலாக பாடியதாக சுருதி பெருமைப்பட்டார்.