‘தல’யின் ஆட்டம் “ஆரம்பம்”! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

947237_10151442619013589_574762005_n

ஸ்ரீ சத்யசாய் மூவீஸ் சார்பில் ரகுராமன் தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு கடந்த ஒரு வருடமாக பெயர் சூட்டப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த படத்துக்கு ‘ஆரம்பம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அஜீத் சுயபுகழ் பாடும் மற்றும் சுய விளம்பரம் செய்யும் வகையில் வரும் தலைப்பையோ வைக்ககூடாது என்று தயாரிப்பாளரிடமும் இயக்குனரிடமும் கோரிக்கை வைக்க, கதையின் கருவுக்கு ஏற்றவாறு இப்போது ஆரம்பம் என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ஆர்யா, டாப்ஸி, ராணா டக்குபதி, கிஷோர் ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் முடிந்து தற்போது தணிக்கை குழுவுக்கு அனுப்பும் நிலையில் உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில் செப்டம்பரில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.