இமான் அண்ணாச்சியின் காமெடியில் “அதுவேற இதுவேற“!

_DSC9073

களிகை G.ஜெயசீலன் வழங்க ஜெனி பவர்புல் மீடியா பட நிறுவனம் சார்பாக பெல்சி ஜெயசீலன் தயாரிக்கும் படம் “அதுவேற இதுவேற”.

இந்த படத்தில் வர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சானியாதாரா நடிக்கிறார். இமான் அண்ணாச்சி, கஞ்சாகருப்பு, பொன்னம்பலம், சிங்கமுத்து, தளபதி தினேஷ், தியாகு, ஷகீலா, போண்டாமணி, சுப்புராஜ், வேல்முருகன் மற்றும் யோகிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள். இமான் அண்ணாச்சி முழுக்க முழுக்க நகைச்சுவை நடிகராக வளம்வருகிறார். படத்திற்கு ஒளிப்பதிவு – ரவிஷங்கர், இசை – தாஜ் நூர். கதை, திரைக்கதை,வசனம்,எழுதி இயக்குகிறார் M.திலகராஜன்.

படம் பற்றி இயக்குனர் திலகராஜன் கூறும்போது, “இந்த சென்னை மாநகரத்திற்கு  வருபவர்கள் டாக்டராக வேண்டும், வக்கீலாக, மந்திரியாக, தொழிலதிபராக, நடிகராக வேண்டும் என்ற கனவுகளுடன் தான் வருவார்கள் ஆனால் குருசாமி வந்த காரணமே வேறு!

அப்படி வந்தவனுக்கு காதல் வருகிறது. காதல் கைகூடி வருகிற நேரத்தில் செய்யாத ஒரு கொலைக்காக குற்றவாளியாகிறான். சுமத்தப்பட்ட பழி அவனை எப்படியெல்லாம் கஷ்டப்படுத்துகிறது. அதிலிருந்து அவன் மீண்டானா? என்பது கதை!

இதை காமெடியாக கதை சொல்லி இருக்கிறோம். தியேட்டரில் சிரிப்பு அலை அலையாக கேட்கும். அந்தளவுக்கு காமெடியாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இது கமர்ஷியல் படமாக உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார் இயக்குனர் M.திலகராஜன்.