நயன்தாராவை வம்புக்கு இழுக்கும் கோடம்பாக்க கோஷ்டி!

Kutraalam vaali

கோடம்பாக்கத்தில் காதல் தோல்வி பாடல் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். குற்றாலம் பட இயக்குனர் சஞ்சய்ராம் மற்றும் நடிகர் வாலி குழுவினர்.

“காதலை கண்டு பிடிச்சவன் யாரு,

மவனே கையில்  கிடைச்சா செத்தான்“

என்ற பாடல் வரிகளை எழுதி அதில் நடித்திருக்கிறார் நடிகர் வாலி. இவர் அஜித்தின் தீவிர ரசிகர். பாடலாசிரியர் வாலி பிறந்த எண் 3. தன்னுடைய பிறந்த நாளின் கூட்டுத் தொகை  அதே முன்றாக வருவதால் வாலி-ன் பெயரையே வைத்து விட்டாராம். இந்த பாடல் உருவாகக் காரணம் என்ன? எனக்கேட்ட போது பல விசயங்களை பேசினார்.

காதலிக்காத மனிதர்கள் இருக்க முடியாது .ஆனால் காதலில் ஜெய்தவர்களை விட  தோற்றவர்களே அதிகம். அதனால் காதல் தோல்வி பாடல்களுக்கு எப்போதுமே மவுசு  அதிகம். ஏற்கனவே சிம்பு பாடிய காதல் ஆல்பத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் நானும் சஞ்சய்ராமும் சேர்த்து போட்ட திட்டம் தான் இந்த முயற்சி.

இந்த பாடலை எடுப்பதற்கு முன் திரை உலகில் சிலரிடம் கருத்து கேட்டோம்.  நடிகர் மோகன்லால் “அது தெரியாத மாயை. யாருக்காவது தெரித்து இருந்தால் என்னிடம் சொல்லுங்கள்” என்றார். நடிகர் நாசர் “இது முட்டாள் தனமான கேள்வி” என  அடிக்க வந்து விட்டார். இயக்குனர் அமீர் “முதல் ஆணும், பெண்ணும்” என்று பதில் தந்தார் .”காதல் என்பது கண்டுபிடிக்கபடுவது இல்லை, உணரபடுவது “என்றார் ராஜகுமாரன்.

என்னுடைய உறவுக்காரப் பையனின் செல்போனை அவன் அப்பா பிடுங்கி வைத்து விட்டார். அவனோ காதலியிடம் பேச முடியவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொண்டான். காதலுக்காக உயிரை விடுவது போன்ற முட்டாள்தனத்தை இனி யாரும் செய்யக்கூடாது. காதல் தோல்வியை உணர்ந்து அனுபவிக்க வேண்டும்.

இப்போதுள்ள நடுத்தர வயதினர்கள் காதல் தோல்வி விசயத்தில் நயன்தாரா வழியை பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள். எத்தனை காதல் தோல்வி வந்தாலும் அவர் தன்னம்பிக்கையை  இழக்கவில்லை. காதலில் தோல்வி அடைத்தவர்கள் முன்பு   போல் தாடி வளர்த்து சோகமாக திரிவதில்லை. இப்போது தாடி வளர்பது ஸ்டைல் ஆகிவிட்டது. அது ஏன்?தாடி வளர்க்கும் ஆண்களைத் தான் பிடிக்கிறது’ என பெண்களே சொல்கிறார்கள்.

நாங்கள் பாடலை வெளி இட்டதும் இதுவரை இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர்  கணினியில் பார்த்து இருக்கிறார்கள். இவர்களில் பெண்களே அதிகம். பெண்களை திட்டினால் அதை ஆண்கள் ரசிப்பதை விட பெண்களே அதிகம் கைதட்டி ரசிக்கிறர்கள். தனியாக எடுக்கப்பட்ட இந்தப் பாடலை படத்தில் சேர்க்க முடியுமா? என்று யோசித்து வருகிறோம் என்றார் நடிகர் வாலி.