விண்வெளியில் உணவு இல்லாமல் சுனிதா வில்லியம்ஸ் சமாளித்தது எப்படி?

நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் அமெரிக்க உள்ளூர் நேரப்படி புளோரிடாவின் கடற்கரையிலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் காப்ஸ்யூலில் பாதுகாப்பாக செவ்வாய்க்கிழமையன்று பூமிக்குத் திரும்பினர்.

போயிங்கின் ஸ்டார்லைனர் கிராஃப்டில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக ஐ.எஸ்.எஸ்ஸில் ஒரு வார காலம் தங்க திட்டமிட்ட அவர்கள், தற்போது ஒன்பது மாதங்களுக்குப் பிறகு திரும்பி வந்துள்ளனர்.

பூமியிலிருந்து 254 மைல்கள் (409 கி.மீ) தொலைவில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்), உலகம் முழுவதிலுமிருந்து விண்வெளி வீரர்களை கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக வரவேற்று வருகிறது. கால்பந்து மைதான அளவிலான ஆராய்ச்சி ஆய்வகத்தை அமெரிக்காவும், ரஷ்யாவும் முதன்மையாக நிர்வகிக்கின்றன இது அறிவியல் ஒத்துழைப்புக்கான முக்கிய மையமாக செயல்படுகிறது.

வில்மோர் மற்றும் வில்லியம்ஸ் ஆகிய இருவரும் பின்னர் நாசாவில் இணைந்த கடற்படை சோதனை விமானிகள். 62 வயதான வில்மோர் டென்னசியில் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி கால்பந்து வீரராக இருந்தார். 59 வயதான வில்லியம்ஸ் மாசசூசெட்ஸ் மாகணத்தில் அமைந்திருக்கும் நீதாமைச் சேர்ந்த போட்டி நீச்சல் வீரர் மற்றும் தொலைதூர ஓட்டப்பந்தய வீரராக இருந்தார்.

இந்த விண்வெளி பயணத்தால் வில்மோர் தனது இளைய மகளின் கல்லூரி படிப்பு காலத்தை தவறவிட்டுள்ளார். அதே நேரத்தில் வில்லியம்ஸ் தனது கணவர், தாய் மற்றும் உறவினர்களை பிரிந்து இருந்த நிலையில், விண்வெளியில் இருந்து இணைய அழைப்புகள் மூலம் அவர்களிடம் தொடர்பில் இருந்தார்.

விண்வெளியில் மாதக்கணக்கில் வாழ்வது தசை மற்றும் எலும்பு இழப்பு, சிறுநீரக கற்களுக்கு வழிவகுக்கும். உடலில் திரவ மாற்றங்கள், பார்வை பிரச்னைகள் மற்றும் ஈர்ப்பு விசைக்கு திரும்பும்போது சமநிலை மறுசீரமைப்பு உள்ளிட்ட உடல் ரீதியான சவால்களை ஏற்படுத்தும். இந்த விளைவுகள் நாசாவால் நன்கு ஆவணப்படுத்தப்பட்டு அவை முறையாகவும் நிர்வகிக்கப்படுகிறது. இதற்கிடைய விண்வெளிக்கு சென்ற இந்த இரண்டு விண்வெளி வீரர்களும் அனுபவம் வாய்ந்த ஐ.எஸ்.எஸ் குழு உறுப்பினர்களாக இருந்தனர். விண்வெளிக்கு செல்வதற்கு முன் அவர்களுக்கு ஏராளமான நிலையப் பயிற்சியும் அளிக்கப்பட்டது

வில்லியம்ஸ் விண்வெளியில் தங்கியிருந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு ஐ.எஸ்.எஸ் கமாண்டர் ஆனார். இந்த மாத தொடக்கம் வரை அவர் கமாண்டர் பதவியை செய்துள்ளார்.

விண்வெளியில் 9 மாதங்கள் வரை இருந்த வில்மோர் மற்றும் வில்லியம்ஸ் அங்கு எப்படி வாழ்ந்தார், உணவாக என்ன சாப்பிட்டார்கள் என்பது பலருக்கும் எழும் தவிர்க்க முடியாத கேள்வியாகவே உள்ளது.

ஐ.எஸ்.எஸ்ஸில் உணவு: கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி, நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) பீட்சா, வறுத்த கோழி மற்றும் இறால் காக்டெய்ல்களை சாப்பிட்டு வந்ததாக தி நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டது

ப்ரஷ் உணவு பொருட்கள் குறைவாகவே இருந்தன: போயிங் ஸ்டார்லைனர் பணி சிக்கல்களை நன்கு அறிந்த இன்னொரு வட்டாரம், அங்கிருக்கும் குழுவினர்கள் ப்ரஷ் உணவு பொருட்களை உட்கொள்வது ஊட்டச்சத்துகளை பராமரிப்பதுக்கு மட்டுமே என்று வெளிப்படுத்தியது.

பல்வேறு வகையான உணவுகள்: விண்வெளி வீரர்கள் பவுடர் பால், பீட்சா, வறுத்த கோழி, இறால் காக்டெய்ல் மற்றும் டுனாவுடன் காலை உணவு தானியத்தை அணுகினர். நாசா மருத்துவர்கள் அவர்களின் கலோரி உட்கொள்ளலை கண்காணித்தனர்.

நாசா புகைப்படம்: செப்டம்பர் 9 அன்று நாசா வெளியிட்ட ஒரு படத்தில் வில்மோர் மற்றும் வில்லியம்ஸ் ஐஎஸ்எஸ்இல் உணவு உட்கொள்வதைக் காட்டியது, அவற்றில் சில உணவுப் பொருள்களும் தெளிவாக தெரிந்தன.

புதிய உணவு குறைவு: புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆரம்பத்தில் கிடைத்தன, ஆனால் மூன்று மாதங்களுக்குள் தீர்ந்துவிட்டன என கூறப்பட்டது. “முதலில் புதிய பழங்கள் உள்ளன, ஆனால் மூன்று மாதங்கள் தொடர்ந்ததால் அது தீர்த்து போய்விட்டது. பழங்கள் மற்றும் காய்கறிகள் பேக் செய்யப்பட்டிருந்தன. உறையும் நிலையில் வைக்கப்பட்டன ” என்று குழுவினருடன் இருந்த நபர் கடந்த ஆண்டு நவம்பரில் கூறினார்.

உணவு தயாரிப்பு: அனைத்து இறைச்சி மற்றும் முட்டைகள் பூமியில் முன்கூட்டியே சமைக்கப்பட்டன. மேலும் அவற்றை மீண்டும் சூடாக்கி மட்டுமே போதுமானது. சூப்கள், குழம்புகள் மற்றும் கேசரோல்கள் போன்ற நீரிழப்பு உணவுகள் ஐஎஸ்எஸ்இன் 530-கேலன் நன்னீர் தொட்டியில் இருந்து தண்ணீரைப் பயன்படுத்தி, மீண்டும் நீரேற்றம் செய்யப்பட்டன. இந்த நிலையம் விண்வெளி வீரர்களின் சிறுநீர் மற்றும் வியர்வையை நுகர்வுக்காக புதிய நீரில் மறுசுழற்சி செய்யப்பட்டது.

எடை இழப்பு கவலைகள்:அங்கு ஒரு விண்வெளி வீரருக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 3.8 பவுண்டுகள் உணவுடன், எதிர்பாராத பணி நீட்டிப்புகளுக்கான கூடுதல் பொருள்களுடன் கையிருப்பில் இருந்துள்ளது.
எந்தவொரு எடை இழப்பும் ஐஎஸ்எஸ்இல் உணவு பற்றாக்குறையால் ஏற்படவில்லை என்று நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Leave a Response