விரைவில் வருகிறது மலிவு விலை பறக்கும் டாக்ஸி! உபர் உடன் கைகோர்த்த நாசா

takci
போக்குவரத்திற்கு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, பறக்கும் வாகனங்கள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில் உபர் மற்றும் நாசா ஆகியவை ஒன்று சேர்ந்து, பறக்கும் டாக்ஸிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இவை வரும் 2020ஆம் ஆண்டு முதல் இயக்கத்திற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரபல டாக்ஸி நிறுவனமான உபர், நாசாவுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

அதன்மூலம் மேம்பட்ட வான்வழி போக்குவரத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக உபர் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு தலைவர் ஜெஃப் ஹோல்டென் நேற்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

பறக்கும் டாக்ஸிகள் குறைந்த உயரத்தில் மட்டுமே பறக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜெட், விமானங்களின் பாதையில் இடைஞ்சல் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

பறக்கும் டாக்ஸிகள் மூலம் 4 பேர் வரை பயணிக்க முடியும். இதற்கான கட்டணம் ’உபர் X’ சேவை போன்றே நிர்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உபர் நிறுவனம் ஏற்கனவே தானியங்கி கார்கள் சேவையில் பெருமளவு முதலீடு செய்துள்ளது. மேலும் 2020ல் துபாய், தல்லாஸ் போன்ற நகரங்களில் பறக்கும் டாக்ஸிகளை இயக்கவும் முடிவு செய்துள்ளது.

Leave a Response