‘கருணாநிதி வீட்டில் ரெய்டு இல்லையா?’ ஏக்கத்தில் சு.சுவாமி!

 

subramanian-swamy

”கருணாநிதி வீட்டில் ரெய்டு இல்லையா?” என்றொரு கேள்வியை தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார் சுப்பிரமணியன் சாமி.

சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் இன்று அதிகாலை 4 மணியிலிருந்து  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் என கிட்டத்தட்ட 180 இடங்களுக்கும் மேல் சோதனை நடந்து வருகிறது. திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள், அங்கு பணியாற்றும் மேலாளர், ஊழியர்களின் வீடுகள் என தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105  இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. இது தவிர ஹைதரபாத், பெங்களூரு டெல்லியில் 82 இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது. மொத்தம் 187 இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலும் ரெய்டு நடந்துவரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சாமி ஒரு புதிய கருத்தை வெளியிட்டு பரபரப்பை அதிகரித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் சுப்பிரமணியன் சாமி, “நீதிமன்றத்தில் சசிகலா குறித்த தகவல்கள் மட்டுமன்றி எம்.கே மற்றும் அவரது மகள் கனிமொழி மோசடிகள் குறித்த 30 பக்க ஆவணத்தை அதிகாரிகளிடம் அளித்திருந்தேன். ஏன் அங்கு இதுவரையில் சோதனை நடத்தவில்லை” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Leave a Response