செலவு செய்யச் சொன்ன தவெக: பதறும் கட்சி நிர்வாகிகள்!

சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் பட்டியல் ஐந்து கட்டங்களாக வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுக்க உள்ள மாவட்டங்களில் சாதி வாரியாக பொறுப்பு வழங்கப்படுகிறது என்றும் பணம் வாங்கிக்கொண்டு பொறுப்பு வழங்கப்படுகிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் லலித்துகளுக்கு பொறுப்புகள் வழங்கியது பற்றியும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பொறுப்புகள் வழங்கியது பற்றியும் தமிழக வெற்றி கழக கட்சியினர்கள் பெருமையாக கூறினார்கள். அந்த வகையில் விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளரான ஆட்டோ ஓட்டுநர் சின்னப்பனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.

பொறுப்பு வாங்கிய கையுடன் நிர்வாகிகளை கூப்பிட்டு விருதுநகர் மாவட்டத்தில் பிற கட்சி மாவட்ட செயலாளர்கள் பணபலம் மற்றும் படை பலத்துடன் இருக்கிறார்கள். அவர்களுடன் என்னால் போட்டி போட முடியாது அதனால் எனக்கு இந்த பொறுப்பெல்லாம் வேண்டாம். ஆட்டோவை நம்பி தான் என்னுடைய வாழ்வாதாரமே இருக்கிறது. இந்த நிலைமையில் என்னால் தொகுதிக்கு செலவு செய்ய முடியாது. இதனால் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து எடுத்து விடுங்கள் என்று கட்சித் தலைமையிடம் தொடர்பு கொண்டு அறிவிக்க இருக்கிறாராம். ஆனால் கட்சி சார்பாக விடுங்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லியதாக கூறப்படுகிறது.

Leave a Response