இவர் பொய்யாக கூறுகிறார்: சீமானை மறைமுகமாக தாக்கிய வைகோ!

பேரறிஞர் அண்ணாவின் 56 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவருடைய நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஒருவர் அப்பட்டமான பச்சை பொய்களை தொடர்ந்து பேசி வருகின்றார்.

ஈழத்திற்கு நான் சென்று இருந்த சமயத்தில் பிரபாகரனுடன் அங்கு தங்கி இருந்தேன். அங்கு நடந்தது குறித்து நான் எந்த ஒரு பத்திரிகைகளிலும் வெளிப்படையாக சொல்லவில்லை. பிரபாகரனுடன் நான் ஒன்றாக இருந்ததற்கான பல ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. இருந்தாலும் நான் அதையெல்லாம் வெளியிடவில்லை.

ஆனால் விரைவில் அதனை வெளியிடுவதற்கான காலங்கள் வரும். முத்தமிழ் அறிஞர் கலைஞர் இடத்திலும் இது குறித்து நான் பேசி இருக்கின்றேன். தற்போது முதல்வர் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது. 2026 ஆம் ஆண்டு திமுக தமிழகத்தில் பெரும்பான்மை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இது திராவிட பூமி. காவிரி பாய்கின்ற பூமி. இந்துத்துவாவ தத்துவத்தை மோடி கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றார். அதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று வைகோ பேசியுள்ளார்.

Leave a Response