உதயநிதி ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் அவர் தமிழர்: சீமான்.

ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய சீமான், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மக்களோடு மக்களாக உணவருந்துகிறார் என்று செய்தி வெளியாகிறது.

இந்தச் செய்தி ஒரு அருவருக்கத்தக்கது. அதுவும் ஆதிதிராவிடர் மக்களுடன் இணைந்து உணவருந்துகிறார் என்ற செய்தி எந்த விதத்தில் சிறப்புக்குறியது என்று நீங்களே சொல்லுங்கள்.

இவர்தான் கொசுவை ஒழிப்பதை போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சமீபத்தில் பேசியிருந்தார். அதனால் தான் தம்பி உங்களை ஒழிக்க நாங்கள் இந்த பாடு படுகிறோம். ஆதிதிராவிடர் மக்களோடு அமர்ந்து உணவருந்துவேன் என்பதுதான் சனாதனம். இந்தச் செய்தியை படித்துவிட்டு உங்களுக்கு கோபமே வரவில்லை என்றால் நீங்கள் திராவிடர்கள். இதைப் படித்துவிட்டு உங்களுக்கு கோபம் வந்தால் நீங்கள் எங்கள் இனம், கூட்டம் நாம் தமிழர்கள் என ஆவேசமாக பேசியுள்ளார்.

Leave a Response