காசிமேட்டில் கள்ளகாதலி வீட்டில் பதுங்கி இருந்த பிரபல ரவுடி வெட்டிக்கொலை!

சென்னை காசிமேடு திடீர் நகர் மூன்றாவது தெரு பகுதியில் வசித்து வருபவர் லோகநாதன் (33), இவர் மீது ஏற்கனவே காசிமேடு மீன் பிடித்து துறைமுக காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வீட்டில் லோகநாதனும் அவரோடு சேர்ந்து வாழ்ந்து வரும் மாலதி (48) என்ற பெண்ணும் வீட்டில் தனியாக இருந்த நிலையில் திடீரென வீட்டில் உள்ளே நுழைந்த ஆறு பேர் கொண்ட மர்மகும்பல் லோகநாதனை சரமாரியாக வெட்டியது. உடனிருந்த மாலதியையும் சரமாரியாக தாக்கியதில் மாலதி நிலை குலைந்து கீழே விழுந்தார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினரைக் கண்ட மர்ம கும்பல், தப்பி ஓடியதை அடுத்து அருகாமையில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தினர் போலீசார் விரைந்து வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாலதியை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையானது அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த லோகநாதனின் சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி பிரேத கிடங்கிற்கு போலீசார்அனுப்பி வைத்தனர்.

கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் தேசியா என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அப்போது அந்த வழக்கில் லோகநாதன் பெயரும் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தேசியாவின் உறவினர்கள் யாரேனும் இதில் ஈடுபட்டார்களா அல்லது வேறு நபர்கள் யாரேனும் கொலை செய்தார்களா என்று கோணத்தில் காசிமேடு மீன் பிடித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Leave a Response