கையை விரித்த சுரேஷ் கோபி! பதிலடி கொடுத்த கனிமொழி!

நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடரின் போது நேற்று கனிமொழி எம்பி பேசிய போது மத்திய மந்திரி சுரேஷ் கோபி கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.

நேற்று கனிமொழி எம்பி பேசியதாவது, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை வெப்ப அலையால் நாட்டில் 5000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். வெப்ப அலையால் உயிர் இழந்தவர்களுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து 4 லட்ச ரூபாய் வழங்கப்படும். மத்திய அரசு வழங்கும் மாநில பேரிடர் நிதியில் 30 சதவீதம் நிதி மக்கள் தொகை மற்றும் மாநில பரப்பளவு அடிப்படையில் வழங்கப்படுகிறது.

மக்கள் தொகையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த தமிழக அரசுக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இது நன்றாக படித்து நிறைய மதிப்பெண் எடுத்த மாணவர்களை வெளியே நிற்க வைப்பதற்கு சமம் என்று கூறிய அவர் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருப்பதால்தான் நாங்கள் வஞ்சிக்கப்படுகிறோம் என்றும் எங்கள் அண்டை மாநிலமான கேரளாவுக்கும் இதே பிரச்சனை தான் இருக்கிறது என்றும் கூறினார். அப்போது திருச்சூர் எம் பி சுரேஷ்கோபி கையை விரித்து காட்டினார். அதற்கு பதில் அளித்த கனிமொழி நீங்கள் கையை விரித்து காட்டுகிறீர்கள். அதே நிலைமைதான் கையை விரித்து விட்டார்கள். மேலும் மத்திய அரசு நம்மை பார்த்து கையை விரிச்சிட்டாங்க என்று கூறினார்.

Leave a Response