தெற்கு மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றில் இளம்பெண் ஒருவர் படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, கல்லூரியில் இருந்து கிராண்ட் சாலைக்கு ஷேர் டாக்ஸியில் சென்றுள்ளார்.
அவர் ஷேர் டாக்ஸியில் சென்றிருந்ததால், அந்த இளம்பெண் பயணம் செய்த டாக்ஸியில் ஏற்கனவே ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார். இந்நிலையில் கல்லூரி மாணவியும் ஷேர் டாக்சியில் ஏறி அந்த இளைஞனுடன் அமர்ந்துள்ளார்.
பின்னர் சிறிது தூரம் சென்றதும் அந்த வாலிபர் தனது ஆடைகளை களைந்து கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக நடந்து கொண்டார். இதனால் கல்லூரி மாணவி அதிர்ச்சி அடைந்தார். இதனிடையே அந்த இளைஞனின் செயலை பதிவு செய்த கல்லூரி மாணவி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் அந்த இளைஞரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ள மும்பை காவல்துறை, வீடியோ தொடர்பாக வேறு ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்று கேட்டுள்ளது.